இலங்கை அரச பயங்கரவாதம்
இலங்கை அரசப் பயங்கரவாதம் என்பது இலங்கை வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். இலங்கை அரசப் பயங்கரவாதம் எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்துதல் [1][2][3] , மக்களின் அடிப்படை மனிதவுரிமைகளை மீறுதல், சட்டத்திற்கு புறம்பான சித்திரவதைகளுக்கு தம் நாட்டு மக்களை உற்படுத்துதல், சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டிய அரசே சட்டத் திட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் புரிந்து மக்களை அச்சுருத்தலுக்கு உற்படுத்துதல், அடிப்படை சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை மீறுதல், தமது நாட்டு பொதுமக்களை படுகொலை செய்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை இனவழிப்பு செய்தல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து வருவதால் இலங்கையில் நடப்பது இலங்கை அரசப் பயங்கரவாதம் ஆகும்.
இலங்கை அரசு முன்னெடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் இலங்கை அரச பயங்கரவாதம் எனப்படுகிறது. இனப் படுகொலைகள், ஆட் கடத்தல், கட்டாய வெளியேற்றம், சித்ரவதை, நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபானமை இன ஈழத்தமிழர்கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கறுப்பு யூலை
- ↑ Sri Lanka commission blames police for prison massacre
- ↑ "Govt. yet to pay compensation to July '83 victims". Archived from the original on 2007-03-10. பார்க்கப்பட்ட நாள் 2009-02-13.