கறுப்பு யூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கறுப்பு யூலை படுகொலை
சிங்கள ஒளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம். நிர்வாணமாக்கப்பட்ட இளைஞனைச் சுற்றி சிரித்து நடனமாடும் சிங்களவர்கள். இடம் பொரளை பேருந்து தரிப்பிடம்.
இலங்கையின் அமைவிடம்
இடம்இலங்கை
நாள்யூலை 24, 1983 - யூலை 26, 1983 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
அதிகமாக இலங்கைத் தமிழர்
தாக்குதல்
வகை
தலை வெட்டு, தீ வைப்பு, கத்திக் குத்து, சூடு
ஆயுதம்கத்திகள், பொல்லுகள், நீ, துப்பாக்கிகள், வெடிபொருட்கள்
இறப்பு(கள்)400 க்கும் 3000 க்கும் இடையில் [1]
காயமடைந்தோர்25 000 +
தாக்கியோர்சிங்கள தீவிரவாதிகள்

கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.[2]

இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. BBC about Black July
  2. "Twenty years on - riots that led to war". பிபிசி. சூலை 23, 2003. மார்ச் 23, 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழ் இணைப்புகள்[தொகு]

ஆங்கில இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு_யூலை&oldid=3365649" இருந்து மீள்விக்கப்பட்டது