புறக்கோட்டை (Pettah) இலங்கையின்கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து கிழக்கில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளிச் சந்தையும் கடைகளும் புகழ்பெற்றவை.[1] ஜாமி-உல்-அல்ஃபார் மசூதியும் கான் மணிக் கூண்டும் குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும்.
புறக்கடையில் உள்ள ஜாமி உல் அல்ஃபார் மசூதி கொழும்பின் மிகப் பழமையானதொரு மசூதியும் நகரில் மிகவும் கூடியளவில் சுற்றிலாப் பயணிகள் காணுமிடமும் ஆகும்.