கோட்டை (கொழும்பு)
கோட்டை (கொழும்பு) කොටුව(කොළඹ) | |
---|---|
நாடு | இலங்கை |
மாநிலம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 00100 [1] |
கோட்டை (Fort) இலங்கைத் தலைநகர் கொழும்பின் மைய வணிக நகர்ப்பகுதியாகும். கொழும்பின் நிதி மாவட்டமாகவும் விளங்குகிறது. இங்குதான் கொழும்பு பங்குச் சந்தையும் அது இயங்குகின்ற கொழும்பு உலக வர்த்தக மையமும் அமைந்துள்ளன. மேலும் இலங்கை வங்கியின் தலைமையகக் கட்டிடமும் இங்குள்ளது. கோட்டைப் பகுதி கடற்கரையோரமாக காலிமுக பசுமை உல்லாச சாலை அமைந்துள்ளது. இது பிரித்தானிய குடியேற்றத்தின்போது 1859ஆம் ஆண்டில் இலங்கை ஆளுனர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு காலத்தில் கட்டமைக்கப்பட்டது. இப்பகுதியில் தலைமை அஞ்சலகமும் தங்குவிடுதிகளும்அரசுத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன.
பிரம்மஞான சபையின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களில் ஒருவரான கர்னல் என்றி ஆல்க்காட்டின் சிலை கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ளது[2]
மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]
- ↑ http://mohanjith.net/postal_codes/western/colombo/00100-fort.html
- ↑ HISTORICAL CONTEXT, இலங்கை, அமெரிக்கத் தூதரக இணையதளம்