நான்காம் ஈழப்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நான்காம் ஈழப்போர்
ஈழப் போர் பகுதி
நாள் சூலை 26, 2006 – மே 18, 2009
இடம் இலங்கை
தெளிவான இலங்கை ராணுவ வெற்றி; விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக குலைக்கப்பட்டனர்; பிரபாகரன் கொல்லப்பட்டார்.
பிரிவினர்
Emblem of Sri Lanka.svg இலங்கை இராணுவம் Ltte emblem.jpg தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மகிந்த ராஜபக்ச வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
150,000 (ஏறத்தாழ.) 18,000 (ஏறத்தாழ.)

நான்காம் ஈழப்போர் (Eelam War IV) என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் தீவிரமடைந்தது. இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைபற்றியது. புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17 அல்லது 18, 2010 அன்று கொல்லப்பட்டார். மே 18ல் இலங்கை அரசு புலிகளுக்கெதிரான போர் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்தது.

புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்[தொகு]

புதுக்குடியிருப்பில் இலங்கைப் படையினர் வேதி ஆயுதங்களால், குறிப்பாக நச்சு வாயுவால் தாக்குதல் நடத்தி உள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.[1] இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான லோரன்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேதி ஆயுதங்கள் இலங்கை படையினருக்கு இந்திய அரசாங்கத்தால் தரப்பட்டதாகும்.[2]

புலிகளின் வீழ்ச்சி[தொகு]

கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வடக்குப் பகுதி நோக்கிய தாக்குதலை இலங்கை அரசு ஆரம்பித்தது. 2009 சனவரியில் புலிகளின் அரசியல் தலை நகரமாகக் கருதப்பட்ட கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்தது[3]. இதன் தொடர்ச்சியாக 2009 மே 18ம் திகதி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றுமாகத் தோற்கடித்து விட்டதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து புலிகளின் அடுத்த தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டார் பத்மநாதன். ஆயினும் விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளே இது சம்பந்தமாக குழப்பங்கள் நிலவியது. ஆயினும் ஆகஸ்ட் 2009 இல் தன்னைத் தானே தலைவராக நிறுவிய பத்மநாதனை இலங்கை அரசு மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் வைத்துக் கைது செய்தது[4].

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Colombo uses chemical weapons: LTTE
  2. http://www.lankasrinews.com/view.php?2b34OX14a3255Aye4d4YOo6ca0ac4BP34d3BTmA2e0dU0MmKce04cYdJ0cc3vlYAde
  3. Sri Lankan War Time Line – BBC
  4. Thailand says Tamil Tiger leader arrested in Malaysia
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_ஈழப்போர்&oldid=2492443" இருந்து மீள்விக்கப்பட்டது