உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் ஈழப்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ஈழப்போர்
ஈழப் போர் பகுதி
நாள் யூலை 23, 1983 – யூலை 29, 1987
இடம் இலங்கை
இந்தியாவினால் சமாதனம் பேசப்பட்டது, இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது
பிரிவினர்
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
ஜே. ஆர். ஜெயவர்த்தனா
டி. ஐ. வீரதுங்க
நலின் செனவிரத்தன
வேலுப்பிள்ளை பிரபாகரன்

முதலாம் ஈழப்போர் (Eelam War I) என்பது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப் போரின் ஆரம்ப நிலைக்கு இடப்பட்ட பெயராகும்.[1]

1970 முதல் இலங்கை அரசுக்கும் தமிழ் போராட்ட குழுக்களுக்குமிடையே பதட்டம் காணப்பட்டபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்தில் யூலை 23, 1983 அன்று தாக்கி 13 படையினர் கொல்லப்படும்வரை போர் முழு அளவில் வியாபித்திருக்கவில்லை.[2] இத்தாக்குதலும் அதன் விளைவாக ஏற்பட்ட கலவரம் தெற்கில் கறுப்பு யூலையாக மாற்றமடைந்தது மோதலின் தொடக்கம் என பொதுவாக கருதப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டு வரை இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சு வார்த்தைகள் பூடானின் திம்புவில் நடைபெற்றபோது, ​​பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நம்பிக்கையில் சண்டை ஓய்ந்தது.[3] சமாதானப் பேச்சுக்கள் பலனளிக்கவில்லை என்பதால், விரைவில் சண்டை மீண்டும் தொடங்கியது.

1986, மே, 17 இல், இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலைத் தொடங்கியது, ஆனால் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. மூன்று நாட்கள் கடுமையான சண்டையின் பின்னர் இலங்கை இராணுவத்தை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு, இலங்கை இராணுவத்தின் போர் உத்தியாக மோட்டார் ஷெல் மற்றும் வான்வழி குண்டுவீச்சு என்று மாறியது. இது யாழ்ப்பாண குடாநாட்டின் கிழக்கு கடற்கரையிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது.[4]

1987 இல், இலங்கை இராணுவத்தின் வடமராட்சி நடவடிக்கையானது இலங்கைத் தீவின் முனையிலுள்ள யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளை முற்றுகையிட்டது. மேலும் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இந்தியாவில் வாழும் ஐந்து கோடி தமிழர்களின் கவலையினால் உள்நாட்டில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இந்திய அரசாங்கம் தாக்குதலை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தது. இந்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்ததையடுத்து, இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி, யாழ்ப்பாண மக்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதற்காக கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டார். இலங்கை கடற்படையினரால் கப்பல் தடுக்கப்பட்டதை அடுத்து, முற்றுகையிடப்பட்ட யாழ் நகரத்திற்கு பூமாலை நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரில் வான்வழிப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்தது.[5]

பூமாலை நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்தும், இலங்கையில் சாத்தியமான தலையீட்டிற்கு இந்திய தரைப்படைகள் தயாராகி வருகின்றன என்ற செய்திகள் போன்றவையும், இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பேச்சுவார்த்தையின் விளைவாக யாழ்ப்பாண முற்றுகை விலக்கபட்டு 1987 யூலை 29 அன்று இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பின்னர் இலங்கைப் படையினர் நாட்டின் வடபகுதியிலிருந்து வெளியேறி, முழுப் பகுதிகளின் கட்டுப்பாட்டையும் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Castellano, Isaac M (2015). Civil War Interventions and Their Benefits: Unequal Return (in English). Lanham: Lexington Books. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-8887-3. இணையக் கணினி நூலக மைய எண் 1030344604.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Skaine, Rosemarie (2013). Suicide warfare: culture, the military, and the individual as a weapon (in English). Santa Barbara, Calif: Praeger. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-39864-3. இணையக் கணினி நூலக மைய எண் 845245192.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. O'Ballance, Edgar (1989). The cyanide war: Tamil insurrection in Sri Lanka, 1973-88 (in English). London; Washington [D.C.]; Elmsford, N.Y., USA: Brassey's (UK) ; Pergamon Press [distributor for the U.S. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-036695-1. இணையக் கணினி நூலக மைய எண் 1000745010.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Parthasarathy, Malini (June 13, 1986). "A military and political misadventure". Frontline: pp. 17–20. 
  5. Weisman, Steven R. (5 June 1987). "India Airlifts Aid To Tamil Rebels". The New York Times. https://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9B0DE0D8173FF936A35755C0A961948260&n=Top%2fNews%2fWorld%2fCountries%20and%20Territories%2fIndia. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஈழப்போர்&oldid=3990911" இலிருந்து மீள்விக்கப்பட்டது