மகிந்த ராசபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகிந்த ராஜபக்ச இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மகிந்த ராசபக்ச
நா.உ
Mahinda Rajapaksa.jpg
2014 இல் ராசபக்ச
13-வது இலங்கைப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
முன்னவர் ரணில் விக்கிரமசிங்க
பதவியில்
நடப்பின் படி 26 அக்டோபர் 2018 – 15 திசம்பர் 2018[கு 1][கு 2]
ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
முன்னவர் ரணில் விக்கிரமசிங்க
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
6-வது அரசுத்தலைவர்
பதவியில்
19 நவம்பர் 2005 – 9 சனவரி 2015
பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
தி. மு. ஜயரத்ன
முன்னவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பின்வந்தவர் மைத்திரிபால சிறிசேன
13-வது, 17-வது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
18 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் இரா. சம்பந்தன்
பதவியில்
6 பெப்ரவரி 2002 – 2 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
அமைச்சரவைப் பதவிகள்
நிதி அமைச்சர்
பதவியில்
26 அக்டோபர் 2018 – 15 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
முன்னவர் மங்கள சமரவீர
பின்வந்தவர் மங்கள சமரவீர
பதவியில்
23 நவம்பர் 2005 – 9 சனவரி 2015
குடியரசுத் தலைவர் இவரே
முன்னவர் சரத் அமுனுகம
பின்வந்தவர் ரவி கருணாநாயக்க
பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
19 நவம்பர் 2005 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர் இவரே
முன்னவர் திலக் மாரப்பன
பின்வந்தவர் மைத்திரிபால சிறிசேன
நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர்
பதவியில்
23 ஏப்ரல் 2010 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர் இவரே
முன்னவர் மங்கள சமரவீர
பின்வந்தவர் கபீர் ஹாசிம்
பதவியில்
22 ஏப்ரல் 2004 – 19 நவம்பர் 2005
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னவர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே
பின்வந்தவர் மங்கள சமரவீர
சட்டம் மற்றும் ஒழுங்காற்றல் அமைச்சர்
பதவியில்
26 ஆகத்து 2013 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர் இவரே
முன்னவர் புதிய அமைச்சு
பின்வந்தவர் ஜோன் அமரதுங்க
மீன்வளத்துறை அமைச்சர்
பதவியில்
19 அக்டோபர் 2000 – 14 செப்டம்பர் 2001
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னவர் இந்திக குணவர்தனா
பின்வந்தவர் மகிந்த விஜேசேகர
தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
பதவியில்
19 ஆகத்து 1994 – 1997
குடியரசுத் தலைவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பின்வந்தவர் அலவி மௌலானா
தேர்தல் தொகுதிகள்
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
15 பெப்ரவரி 1989 – 19 நவம்பர் 2005
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் நிருபமா ராஜபக்ச
பெலியத்தை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
27 மே 1970 – 21 சூலை 1977
முன்னவர் டி. பி. அத்தப்பத்து
பின்வந்தவர் ரஞ்சித் அத்தப்பத்து
தனிநபர் தகவல்
பிறப்பு பேர்சி மகேந்திர ராஜபக்ச
18 நவம்பர் 1945 (1945-11-18) (அகவை 75)
வீரக்கட்டி, தென் மாகாணம், இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை பொதுசன முன்னணி (2018 இற்குப் பின்னர்)
பிற அரசியல்
சார்புகள்
இலங்கை சுதந்திரக் கட்சி (2018 இற்கு முன்னர்)
வாழ்க்கை துணைவர்(கள்) சிராந்தி ராசபக்ச
(இயற்பெயர் விக்கிரமசிங்க)
பிள்ளைகள் நாமல்
யோசித்த
ரோகித்த
இருப்பிடம் மெதமுலான வளவு
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
இணையம் அதிகாரபூர்வ தளம்

பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්‍ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945[1]), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மகிந்த ராஜபக்ச) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார்.[2] முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.

வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.[3]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை.[4]2019 2020 நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் பிரதமரானார்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

பின்னணி[தொகு]

மகிந்த இராசபக்ச அம்பாந்தோட்டையில் வீரக்கெட்டிய என்ற ஊரில்[5] புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை டி. ஏ. ராசபக்ச தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது மாமன் டி. எம். ராசபக்ச அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930களில் பதவி வகித்து வந்தவர்.[5]

ஆரம்ப வாழ்வும் கல்வியும்[தொகு]

ராசபக்ச காலி, ரிச்மண்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு, நாளந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[5][6] ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார்.[7][8] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டவறிஞர் ஆனார்.[9] தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.[5]

குடும்பம்[தொகு]

1983 இல் ராசபக்ச சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார்.[10] இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர்.[11]

மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராசபக்ச இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாலராகப் பணியாற்றினார்.[12] இன்னும் ஒரு சகோதரர் பசில் ராசபக்ச கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் மூத்த சகோதரர் சாமல் ராசபக்ச நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார்.

கௌரவ விருதுகள்[தொகு]

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.[13]

விமர்சனங்கள்[தொகு]

மனித உரிமை மீறல்கள்[தொகு]

இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

 • 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.[14]
 • 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிக்கையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[15]
 • ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் சூலை 2005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2006 ஏப்ரல் மாதத்தில் குற்றம் சாட்டியது.[16]
 • இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் [17] அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார்.[சான்று தேவை]
 • இவர் மீது போர்க்குற்றம் சம்பந்தமான வழக்கு ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்டது.[18][19]

குறிப்புகள்[தொகு]

 1. 2018 நவம்பர் 14 இல் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
 2. 2018 திசம்பர் 3 இல் பிரதமரின் கடமைகள் உச்சநீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mahinda Rajapakse". Encyclopaedia Britannica. பார்த்த நாள் August 9, 2017.
 2. "இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!".NDTV தமிழ் (அக்டோபர் 26, 2018)
 3. "(BBC)". BBC News (2010-01-27). பார்த்த நாள் 2012-09-28.
 4. "Sri Lanka election: Mahinda Rajapaksa concedes he is unlikely to be PM". தி கார்டியன். 18-08-2015. https://www.theguardian.com/world/2015/aug/18/mahinda-rajapakse-concedes-defeat-in-sri-lanka-elections. பார்த்த நாள்: 2 September 2015. 
 5. 5.0 5.1 5.2 5.3 President's Fund of Sri Lanka, President's Profile பரணிடப்பட்டது 4 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம்
 6. Nalanda Keerthi Sri பரணிடப்பட்டது 7 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
 7. "Mahinda Rajapaksa". பார்த்த நாள் 17 August 2018.
 8. When Mahinda became the youngest MP பரணிடப்பட்டது 30 செப்டம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் Thilakarathne, Indeewara, The Sunday Observer
 9. "President Mahinda Rajapaksa". President.gov.lk. பார்த்த நாள் 2012-09-28.[தொடர்பிழந்த இணைப்பு]
 10. "First Lady of Sri Lanka". Dailynews.lk (2006-02-26). மூல முகவரியிலிருந்து 8 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-09-28.
 11. "His Excellency the President Chief Guest at the Commissioning Parade held at the Naval and Maritime Academy". Navy.lk. மூல முகவரியிலிருந்து 27 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-09-28.
 12. "Sri Lanka: a country ruled as a family business by four brothers". The Telegraph (UK). பார்த்த நாள் 17 Oct 2013.
 13. கௌரவ விருதுகள்
 14. 3 சிங்கள ஊடகவியலாளர்கள் கடத்தல் தமிழ் நெட் அணுகப்பட்டது பெப்ரவரி 11, 2007 (ஆங்கில மொழியில்)
 15. "Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 2006-04-25. http://hrw.org/english/docs/2006/04/25/slanka13262.htm. பார்த்த நாள்: 2006-10-01. 
 16. "Tamilnet editor’s murder still unpunished after one year". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 2006-04-28. Archived from the original on 2006-08-22. http://web.archive.org/web/20060822091217/http://www.rsf.org/article.php3?id_article=17503. பார்த்த நாள்: 2006-10-01. 
 17. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, (ஆங்கில மொழியில்)
 18. http://www.tamilwin.com/show-RUmryFRZNbeo3.html
 19. http://www.colombotelegraph.com/index.php/war-crime-case-against-mahinda-rajapaksa-dismissed-by-us-court/

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
ரணில் விக்கிரமசிங்க
இலங்கை பிரதமர்
2004–2005
பின்னர்
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னர்
சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கை சனாதிபதி
2005–2015
பின்னர்
மைத்திரிபால சிறிசேன
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_ராசபக்ச&oldid=3162788" இருந்து மீள்விக்கப்பட்டது