2022 இலங்கைப் போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2022 இலங்கைப் போராட்டங்கள்
Anti-government protest in Sri Lanka 2022.jpg
ஜனாதிபதி செயலகம் முன்பாக போராடும் எதிர்ப்பாளர்கள்
நாள்2022 மார்ச் 16 முதல்
இடம்இலங்கை,
இலங்கையர்கள் பெரும்பாலும் வாழும்
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
பிரான்ஸ்
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
காரணம்
 • பொருளாதார நெருக்கடி 2019 முதல்
 • தொடர் மின்சார துண்டிப்பு
 • எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு
 • பணவீக்க அதிகரிப்பு
 • ராசபக்ச குடும்பத்தின் ஊழல் ஆட்சி [1]
இலக்குஅரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக
முறைஅரசியல் ஆர்ப்பாட்டம்,
இணைய செயல்பாடு
நிலைசமகாலத்தில்
 • நெருக்கடிச் சட்டம்
 • நாடு தழுவிய ஊரடங்கு
 • சமூகவலைத்தடங்களுக்குத் தடை
முரண்பட்ட தரப்பினர்

போராட்டக்காரர்கள்

வழிநடத்தியோர்
 • கோட்டாபய ராசபக்ச
 • மகிந்த ராஜபக்ச
இழப்புகள்
50 போராட்டகாரர்கள் காயம்[2]
600 பேர் கைது [3]
ஒருவர் இறப்பு[4]
24 பொலிஸார் காயமடைந்தனர்[5]

2022 இலங்கைப் போராட்டங்கள் (2022 Sri Lankan protests) இலங்கையில் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கை சனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சி சார்பற்ற எதிர்ப்பாளர்கள் இத்தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ராஜபக்ச குடும்பத்தால் நடத்தப்படும் அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.[6][7]

இலங்கை அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தால் கடுமையான பணவீக்கம், தினசரி மின்தடை,[8] எரிபொருள் தட்டுப்பாடு என பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது.[9] நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டொலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னணி[தொகு]

காலக்கோடு[தொகு]

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, உணவுப் பொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்ட பல்வேறு தரப்பினரும் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியன்று சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கான சமூக ஊடகத் தலைவர்களும் இம்முற்றுகையில் பங்கேற்று சனாதிபதியை பதவி விலகுமாறு கோரி போராடினர். இரண்டு இராணுவப் பேருந்துகள் மற்றும் காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்த எதிர்ப்பாளர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசினர். கொழும்பின் பிரதான வீதியையும் மறித்துள்ளனர். இரவு விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மறுநாள் காலை நீக்கப்பட்டது. ஆனால் காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் நகரில் அதிகரிக்கப்பட்டனர்.[10][11][12][13]

கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் விசிறிகளை பயன்படுத்தினர். சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஐந்து அதிகாரிகள் காயமடைந்ததாகவும், 45 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த போராட்டம் ஒரு தனியார் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஆனால் பின்னர் அரசாங்க பத்திரிகையாளர்களின் அழுத்தம் காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.[14]

போராட்டத்தின் போது இலங்கை அரசுத்தலைவர் வீட்டில் இல்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அரசுத்தலைவரின் அலுவலக அறிக்கை ஒன்றில் "31.03.2022 இரவு போராட்டங்கள் தீவிரவாத சக்திகளால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறுகிறது."[14]

ஏப்ரல் 1, 2022 அன்று, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் சார்பாக 300 பேருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மிரிகானை காவல்துறையில் இலவசமாக வழக்காட முன்வந்தனர்.[15]

விளைவுகள்[தொகு]

காலி துறைமுகப் பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரதமர் மகிந்த ராசபசவின் ஆதரவாளர்கள் மே 9 அன்று போராட்டக்காரர்களின் கூடாரத்தி தாக்கி அழித்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரம் கொழும்பு தவிர நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவியது. இக்கலவரத்தில் பலர் காயமுற்றனர், பேருந்துகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. [16] குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.[17]

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராசபச திங்கள் கிழமை தனது பதவியில் இருந்து விலகினார். அவரது சகோதரரான கோட்டாபய ராசபச நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார். [18]

சில இணக்கப்பாடுகளுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவராக தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சதித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சனாதிபதி கோட்டாபய ராசபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆனால் வியாழக்கிழமை (மே 12) தற்போதைய நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு சனாதிபதி கோட்டாபய ராசபகச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட இரணில் விக்கரமசிங்க இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பேன் என்றார். [19] [20]இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது. இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் சனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். 'சர்வகட்சி அரசாங்கம் ஒன்றையே தாம் கோரிய போதிலும், அதனை பொருட்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது' என மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் சசித் பிரேமதாசவிற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரமாக அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சசித் பிரேமதாச, பல கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆட்சிக்கே இணங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சசித் பிரேமதாச,பல கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆட்சிக்கே இணங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். [21]

மே 9 அன்று இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்சவின் ஆதரவாளரான அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கி சூட்டில் இறந்தார். ராசபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் வீடும் தீ வைத்து பொதுமக்களால் எரிக்கப்பட்டது.[22] அம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராசபக்சவின் பூர்வீக வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.[23] கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில் வைத்து அண்மையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. [24]முன்னாள் பிரதமர் மகிந்த குடும்பத்துடன் எலிகாப்டர் மூலம் திருகோணாமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு தப்பிச்சென்று உள்ளார் [25] திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. [17]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sri Lanka's all-powerful Rajapaksas under fire" (in en). France 24. 1 April 2022. https://www.france24.com/en/live-news/20220401-sri-lanka-s-all-powerful-rajapaksas-under-fire. 
 2. Dhillon, Amrit (1 April 2022). "Sri Lanka: 50 injured as protesters try to storm president’s house amid economic crisis". தி கார்டியன். https://www.theguardian.com/world/2022/apr/01/sri-lanka-protesters-try-to-storm-presidents-house-as-economic-crisis-deepens. 
 3. "Sri Lanka arrests over 600 protestors violating curfew in Western Province". The New Indian Express. 3 April 2022. https://www.newindianexpress.com/world/2022/apr/03/sri-lanka-arrests-over-600-protestors-violating-curfew-in-western-province-2437414.html. 
 4. "Man gets electrocuted while protesting against power cuts in Sri Lanka: Police". Deccan Herald (கொழும்பு). 3 April 2022. https://www.deccanherald.com/international/world-news-politics/man-gets-electrocuted-while-protesting-against-power-cuts-in-sri-lanka-police-1097330.html. 
 5. "Sri Lanka president declares public emergency after protests against economic crisis". தி கார்டியன். 2 April 2022. https://www.theguardian.com/world/2022/apr/02/sri-lanka-president-declares-public-emergency-after-protests-against-economic-crisis. 
 6. "Sri Lanka: 50 injured as protesters try to storm president’s house amid economic crisis" (in en). the Guardian. 1 April 2022. https://www.theguardian.com/world/2022/apr/01/sri-lanka-protesters-try-to-storm-presidents-house-as-economic-crisis-deepens. 
 7. "Main opposition SJB to hold mass protest rally in Colombo". NewsWire. 13 March 2022. https://www.newswire.lk/2022/03/13/main-opposition-sjb-to-hold-mass-protest-rally-in-colom/. 
 8. 100010509524078 (2022-04-01). "இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்". மாலை மலர். 2022-04-02 அன்று பார்க்கப்பட்டது.
 9. "அரிசி கிலோ ரூ.448! பால் லிட்டர் ரூ.263..! இலங்கையில் அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்". Dailythanthi.com. 2022-03-17. 2022-04-02 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Sri Lanka: Protest at president Rajapaksa's home turns violent". BBC News. April 2022. https://www.bbc.com/news/world-asia-60950266. 
 11. "Dozens arrested in Sri Lanka following protests over economy". April 2022.
 12. "Sri Lanka economic crisis: The all-powerful Rajapaksas under fire".
 13. "Sri Lanka steps up security as anger over economic crisis boils over". DAWN.COM. April 1, 2022.
 14. 14.0 14.1 "Protesters storm Sri Lankan president's home as crisis deepens". April 2022.
 15. "Over 300 lawyers at Mirihana Police to represent arrested protesters free of charge". NewsWire. 1 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 16. இலங்கை போராட்டம் வன்முறையாக மாறியது ஏன்? பிபிசி தமிழ் செய்தியாளர்களின் கள அனுபவம்
 17. 17.0 17.1 எங்கு இருக்கிறார் மகிந்த ராஜபக்சே? திடீர் என இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு
 18. மஹிந்த ராஜபக்ஷ: ஓர் 'அரசன்' வீழ்ந்த கதை
 19. இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி
 20. நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி மட்டுமே! 6வது முறை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க!
 21. இலங்கை நெருக்கடி: ரணிலுக்கு சஜித் பதில்: "பல கட்சி ஆட்சிக்கே இணங்குவோம் "
 22. இலங்கை ஷாக்: பொதுமக்கள் தாக்குதலுக்கு அஞ்சி ராஜபக்சே ஆதரவு எம்.பி அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை?
 23. மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் - இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு..!
 24. அமரகீர்த்தி அத்துகோரல: இலங்கை எம்.பி அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறும் உடற்கூராய்வு அறிக்கை
 25. திருகோணமலையிலிருந்து தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்ச! வைரலாகும் ஓடியோ