எல்லைகளற்ற செய்தியாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders, அல்லது RWB, பிரெஞ்சு: Reporters sans frontières, எசுப்பானியம்: Reporteros Sin Fronteras, அல்லது RSF) என்பது ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் ஒரு பன்னாட்டு அரச-சார்பற்ற நிறுவனம். இது பாரிசு நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது 1985 ஆம் ஆண்டு பிரான்சின் மொண்டெபெலீயர் என்ற இடத்தில் ராபர்ட் மேனார்ட், ரொனி புரோமன், ஊடகவியலாளர் சான்-குளோட் கிலிபாட் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது[1].

ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் சாகரொவ் விருது 2005 ஆம் ஆண்டில் எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]