மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) மனித உரிமைகளை முன்னிறுத்தும், ஆயும் கட்சி சார்பற்ற, அரச சார்பற்ற ஓர் அமைப்பு. இவ் அமைப்பின் தலைமையகம் நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் பாரிய மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகும்.
இவ் அமைப்பில் 150 க்கும் மேற்பட்ட திறனர்கள் கடமையாற்றுகின்றார்கள். நம்பிக்கை வாய்ந்த அறிக்கைகளை தாயாரிப்பதுவே இவ் அமைப்பின் ஒரு முக்கிய பணியாகும். இவ் அமைப்பின் அறிக்கைகளுக்கு சர்வதேச மதிப்பு உண்டு.