ரிச்மண்ட் கல்லூரி, காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிச்மண்ட் கல்லூரி (இலங்கை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரிச்மண்ட் கல்லூரி Richmond College
ரிச்மண்ட் கல்லூரி சின்னம்
அமைவிடம்
காலி
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Nisi Dominus Frustra
இலத்தீன் - ( No amount of human effort will bring success, without the blessings of God)
தொடக்கம்1814 வெஸ்லியன் மிசனரி பாடசாலை, 1876 காலி உயர்தரப் பாடசாலை
நிறுவனர்வண. பென்ஜமின் குலோக்
அதிபர்இ.எம்.எஸ். ஏக்கநாயக்க
தரங்கள்1 - 13
பால்ஆண்கள்
வயது6 to 19
நிறங்கள்            
இணையம்

ரிச்மண்ட் கல்லூரி (Richmond College) தென் மாகாணம், காலி மாவட்டம் காலி நகரில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றான இதுவொரு தேசியப் பாடசாலை யாகும்.

இலங்கையில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இப்பாடசாலை வெஸ்லியன் மிசனரியால் சூன் 29 1814ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது வெஸ்லியன் மிசனரி பாடசாலையெனவும், 1876ம் ஆண்டு காலி உயர்தரப் பாடசாலையெனவும் அழைக்கப்பட்டது. 1882ம் ஆண்டிலிருந்தே ரிச்மண்ட் கல்லூரி என அழைக்கப்பட்டது. 1962ம் ஆண்டில் இப்பாடசாலை அரசாங்கப் பாடசாலையாகவும், 1986ம் ஆண்டில் தேசிய பாடசாலையாகவும் மாற்றம் பெற்றது.

கல்லூரியின் முகப்புத் தோற்றம்

இப்பாடசாலையில் முதல் அதிபராக வண. பென்ஜமின் குலோக் என்பவர் பணியாற்றியுள்ளார். இப்பாடசாலையின் தற்போதைய அதிபர் இ.எம்.எஸ். ஏக்கநாயக்க என்பவராவார்.

இலங்கையின் தற்போதைய சனாதிபதி மகிந்த ராசபக்ச, தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ச இலங்கையின் முன்னால் பிரதமர் டபிள்யூ. தகநாயக்கா இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் முன்னால் கல்வியமைச்சர் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா இலங்கையின் முன்னால் உயர்நீதி மன்ற பிரதம நீதியரசர் (1991) ஜீ.பீ.எஸ்.டி சில்வா போன்றோர் இப்பாடசாலையில் கற்று இலங்கையில் முன்னனியில் திகழும் சிலராவார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்மண்ட்_கல்லூரி,_காலி&oldid=3226938" இலிருந்து மீள்விக்கப்பட்டது