கோத்தாபய ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோத்தாபய ராஜபக்ச
Gotabaya Rajapaksa
Gotabhaya Rajapaksa.jpg
பிறப்பு சூன் 20, 1949 (1949-06-20) (அகவை 70)
பிறந்த இடம் மாத்தறை, இலங்கை
சார்பு இலங்கையின் கொடி இலங்கை
பிரிவு இலங்கை இராணுவம்
சேவை ஆண்டு(கள்) 1971 - 1992
தரம் லெப்டினன்ட் கேர்ணல்
ஆணை கஜபா படைவகுப்பணி
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்
சமர்/போர்கள் முதலாம் ஈழப்போர்
இரண்டாம் ஈழப்போர்
நான்காம் ஈழப்போர்
விருதுகள் ரண விக்ரம பதக்கம்
ரண சூர பதக்கம்
வேறு பணி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளர் (2005 - 9 சனவரி 2015)

லெப்டினன்ட் கேணல் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச (Nandasena Gotabaya Rajapaksa, சிங்களம்: ගෝඨාභය රාජපක්ෂ, பிறப்பு: 20 சூன் 1949) இலங்கை படைத்துறையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார். இவர் 2005 நவம்பர் முதல் 2015 சனவரி வரை இலங்கைப் பதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஈழப்போரின் போது பல நாட்டின் இடங்களிலும் பணியாற்றிய பின்னர் 1992 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இருந்து இளைப்பாறினார். இவரது சகோதரர் மகிந்த ராசபக்ச 2005 ஆம் ஆண்டில் இலங்கை அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, இவர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். மகிந்த ராசபக்ச 2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து இவரும் பதவி இழந்தார்.[1]

இவர் 2006 டிசம்பரில் விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் கருதப்படும் தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[2]

இவர் 2019 இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி சார்பாக போட்டியிட உள்ளார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தாபய_ராஜபக்ச&oldid=2790228" இருந்து மீள்விக்கப்பட்டது