பசில் ராஜபக்ச
பசில் ராசபக்ச Basil Rajapaksa | |
---|---|
நிதி அமைச்சர் | |
பதவியில் 8 சூலை 2021 – 3 ஏப்பிரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | மகிந்த ராசபக்ச |
பின்னவர் | அலி சப்ரி |
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 9 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராசபக்ச |
பிரதமர் | தி. மு. ஜயரத்ன |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 8 சூலை 2021 – 9 சூன் 2022 | |
முன்னையவர் | ஜயந்த கெத்தகொட |
பின்னவர் | தம்மிக்க பெரேரா |
பதவியில் 19 செப்டம்பர் 2007 – 9 பெப்ரவரி 2010 | |
முன்னையவர் | முகமது இசுமைல் அன்வர் இசுமைல் |
கம்பகா மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015 | |
பெரும்பான்மை | 425,861 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பசில் ரோகண ராசபக்ச 27 ஏப்ரல் 1952 இலங்கை |
குடியுரிமை | இலங்கையர், அமெரிக்கர்[1] |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
துணைவர் | புஷ்பா ராசபக்ச |
பிள்ளைகள் | தேஜனி, பிமல்கா, அசந்தா |
முன்னாள் கல்லூரி | இசிபத்தான வித்தியாலயம் ஆனந்தா கல்லூரி |
இணையத்தளம் | basilrajapaksa |
பசில் ராஜபக்ச (Basil Rajapaksa; சிங்களம்: බැසිල් රාජපක්ෂ; பிறப்பு: 27 ஏப்ரல் 1951) இலங்கை அரசியல்வாதி ஆவார். இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் உறுப்பினரான இவர் இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இவர் 2005–2010 காலப்பகுதியில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய இவர், 2007 இல் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2010 முதல் 2015 மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.[2] 2021 சூலையில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்று கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் தீவிர அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார், இறுதியில் ஏப்ரல் 2022 இல் பொது மக்களின் அதிகரித்த எதிர்ப்புகளின் காரணமாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் 2022 சூன் 9 அன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.[3]
பசில் ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையுடன் ஐக்கிய அமெரிக்க குடியுரிமையும் கொண்டுள்ளார்.[4]
குடும்பம்
[தொகு]பசில் இலங்கையின் தெற்கே ஒரு பிரபலமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை, டி. ஏ. ராஜபக்ச, ஒரு முக்கிய அரசியல்வாதியும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், விஜயானந்த தகநாயக்காவின் அரசில் விவசாய, காணி அமைச்சராகவும் இருந்தவர். பசில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் (2010-2015) சாமல் ராஜபக்ச, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச, தற்போதைய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவர் தனது இடைநிலைக் கல்வியை கொழும்பில் உள்ள இசிபத்தான வித்தியாலயம், ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.
கைது
[தொகு]இவரின் அண்ணன் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து அந்த நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின் நேற்று[எப்போது?] இலங்கைக்கு வந்த இவரை அந்த நாடு காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கிற்காக கைது செய்தனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I have not renounced my US citizenship – Basil Rajapaksa". Newsfirst.lk. https://www.newsfirst.lk/2019/11/13/i-have-not-renounced-my-us-citizenship-basil-rajapaksa/.
- ↑ "New Cabinet sworn in". Archived from the original on 25 April 2010. பார்க்கப்பட்ட நாள் 23 April 2010.
- ↑ [/basil-vacates-mp-seat-tenders-resignation "Basil vacates MP seat, tenders resignation"]. Adaderana. /basil-vacates-mp-seat-tenders-resignation.
- ↑ "I have not renounced my US citizenship – Basil Rajapaksa". Newsfirst.lk. https://www.newsfirst.lk/2019/11/13/i-have-not-renounced-my-us-citizenship-basil-rajapaksa/.
- ↑ ராஜபக்ஷ கைது பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2015
வெளி இணைப்புகள்
[தொகு]- பசில் ராஜபக்ச பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
- WikiLeaks: Basil Is Corrupt, Education Limited And Expelled From School, Colombo Telegraph, சூலை 8, 2021