அலி சப்ரி
எம். யூ. எம். அலி சப்ரி M. U. M. Ali Sabry நா.உ | |
---|---|
![]() | |
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 22 சூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | தினேஷ் குணவர்தன |
முன்னவர் | ஜி. எல். பீரிஸ் |
நிதி அமைச்சர் | |
பதவியில் 5 ஏப்ரல் 2022 – 9 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னவர் | பசில் ராஜபக்ச |
பின்வந்தவர் | ரணில் விக்கிரமசிங்க |
நீதி அமைச்சர் | |
பதவியில் 12 ஆகத்து 2020 – 9 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னவர் | தலதா அத்துகோரல |
பின்வந்தவர் | விஜயதாச ராஜபக்ச |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 மே 1970 களுத்துறை, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
படித்த கல்வி நிறுவனங்கள் | சாகிரா கல்லூரி, கொழும்பு, களுத்துறை முசுலிம் மத்திய கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | முசுலிம் |
அலி சப்ரி என அழைக்கப்படும் முகம்மது உவைசு முகம்மது அலி சப்ரி (Mohamed Uvais Mohamed Ali Sabry; பிறப்பு: மே 1, 1970) இலங்கை முசுலிம் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஆவார்.[2] அவர் இதற்கு முன்னர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5] இவர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமை சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர்.[6]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
அலி சப்ரி களுத்துறையில் எம். எஸ். எம். உவைசு, சரீன் உவைசு ஆகியோருக்குப் பிறந்தவர். களுத்துறை முசுலிம் மத்திய கல்லூரியிலும், கொழும்பு சாகிரா கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.[7]
அரசியலில்[தொகு]
2020 ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இறங்கினார். இலங்கை பொதுசன முன்னணியில் உறுப்பினரானார்.[8] 2020 சூலையில், கட்சியின் முசுலிம் பேரவையின் தேசியத் தலைவராக அரசுத்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10][11]
2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது பெயர் பொதுசன முன்னணியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேர்தலின் பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.[12][13] 2020 ஆகத்து 12 இல், இவர் கோட்டாபய ராஜபக்சவினால் 9-வது நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[14][15]
இவர் இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் சார்பில் 2020 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கோட்டாபய ராஜபக்சவின் அரசில் நீதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[16][17][18]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Directory of Members: Hon. M .U. M. Ali Sabry, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். 19 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ali Sabry is the new Foreign Minister of Sri Lanka". NewsIn Asia. 22 July 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Subramanian, Nirupama. "Meet the man who has the most unenviable job in Sri Lanka: Ali Sabry, Finance Minister". The Indian Express. 22 July 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ admin (2020-08-12). "Ali Sabry takes oaths as new Justice Minister | Colombo Gazette" (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Times, Colombo (2020-08-12). "Lawyer turned politician Ali Sabry is the new Justice Minister". Colombo Times (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New Cabinet: Ali Sabry appointed Minister of Justice". CeylonToday (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "President's Counsel Sabry signs nomination papers for appointed MP". colombotimes.net. http://colombotimes.net/presidents-counsel-sabry-signs-nomination-papers-for-appointed-mp/. பார்த்த நாள்: 16 August 2020.
- ↑ Rasooldeen, Mohammed. "All citizens equal in SLPP Government – Ali Sabry". Daily News (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Corr, Addalaichenai-Central. "Muslims should rally round SLPP – Ali Sabry". Daily News (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ali Sabry, Uwais Hajiar lead SLPP Muslim Federation". www.ft.lk (English). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "Ali Sabry, Uwais Hajiar to lead SLPP Muslim wing". www.themorning.lk. 2020-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Muslims countrywide contributed to SLPP victory: Ali Sabry | Daily FT". www.ft.lk (English). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ Indrakumar, Menaka. "SLPP releases National list". Daily News (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ LBO (2020-08-12). "Swearing-in ceremony for Sri Lanka's new Cabinet". Lanka Business Online (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Minister of Justice Ali Sabry PC". www.dailymirror.lk (English). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ LBO (2020-08-12). "Swearing-in ceremony for Sri Lanka's new Cabinet". Lanka Business Online (ஆங்கிலம்). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Minister of Justice Ali Sabry PC". www.dailymirror.lk (English). 2020-08-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections - 2020 - Declaration under Article 99A of the Constitution" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. எண். 2188/2. Colombo, Sri Lanka. 10 August 2020. p. 2A. 11 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
- வாழும் நபர்கள்
- 1970 பிறப்புகள்
- இலங்கை வழக்கறிஞர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கை பொதுசன முன்னணி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை முசுலிம்கள்
- களுத்துறை மாவட்ட நபர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- இலங்கையின் நிதி அமைச்சர்கள்
- இலங்கையின் நீதி அமைச்சர்கள்
- இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்