திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி. மு. ஜயரத்ன

நா.உ.
இலங்கையின் 20வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
21 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
முன்னவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
தனிநபர் தகவல்
பிறப்பு 6 ஏப்ரல் 1936 (1936-04-06) (அகவை 81)[1]
அரசியல் கட்சி சுதந்திரக் கட்சி
சமயம் பௌத்தம்[2]

பிரபலமாக தி.மு.ஜயரத்ன என அறியப்பட்ட திசாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன (Disanayaka Mudiyanselage Jayaratne, பிறப்பு: ஏப்ரல் 6 1936[2]) இலங்கையின் 20வது பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் துவக்க உறுப்பினரான ஜயரத்ன 1970 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 2010 ஏப்ரல் 21 ஆம் நாள் இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றார்[3].சுதந்திர இலங்கையின் 7வது நாடாளுமன்றம் (1970), சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜயரத்ன தனது ஆரம்பக் கல்வியை கம்பளை தொலுவ கிராமிய விகாரை பாலர் பாடசாலையிலும், பின்னர் கம்பளை சாகிராக் கல்லூரி, கண்டி காந்தி வித்தியாலயம் ஆகியவற்றிலும் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கண்டி காந்தி வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பின்னர் கம்பளையில் உப தபாலதிபராகவும் பணியாற்றினார்.

அரசியலில்[தொகு]

1951 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்த போது ஜயரத்ன அவருடன் இணைந்தார். அக்கட்சியின் அப்போதைய பதின்மூன்று முக்கியஸ்தர்களில் இவரும் ஒருவராவார். 1959 இல் கிராம சபை தேர்தலில் தோற்றி ‘கந்துகர பஹல கோறளே’ கிராம சபையில் கிராம சபை உறுப்பினரானார். 1961 இல் அதன் தலைவராகவும் ஆனார்.

1970 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்பளைத் தொகுதியின் அங்கத்தவரானார். 1969 முதல் 1994 வரையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1994 இல் கம்பளைத் தொகுதியில் வெற்றி பெற்று சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் காணி, விவசாயம் மற்றும் வன வள அமைச்சராகைப் பணியாற்றினார். 2000 இல் விவசாய, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், 2004 ஆம் ஆண்டில் தபால், தொலைத் தொடர்பு, மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சராகவும் 2005 இல் தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், 2007 முதல் நாடாளுமன்றம் 2009 ஆம் ஆண்டில் கலைக்கப்படும் வரை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
இலங்கை பிரதமர்
2010–இற்றை வரை
பதவியில் உள்ளார்