உள்ளடக்கத்துக்குச் செல்

அலவி மௌலானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலவி மௌலானா
Alavi Moulana
5வது மேல் மாகாண ஆளுனர்
பதவியில்
1 பெப்ரவரி 2002 – 23 சனவரி 2015
முன்னையவர்பத்மநாதன் இராமநாதன்
பின்னவர்கே. சி. லோகேசுவரன்
தொழில் அமைச்சர்
பதவியில்
2001–2002
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
செய்து அகமது செய்து அலவி மௌலானா

1 சனவரி 1932 (1932-01-01) (அகவை 92)
இலங்கை
இறப்பு(2016-06-15)சூன் 15, 2016
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழிடம்தெகிவளை
முன்னாள் கல்லூரிபுனித பீட்டர்சு கல்லூரி, கொழும்பு
சாகிரா கல்லூரி
தொழில்தொழிற்சங்கவாதி

செய்யது அகமது செய்யது அலவி மௌலானா (Seyed Ahmed Seyed Alavi Moulana, 1 சனவரி 1932 - 15 சூன் 2016)[1] என்பவர் இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த இவர் மேல் மாகாண ஆளுநராகவும், இலங்கை அமைச்சரவையில் தொழில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[2][3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

அலவி மௌலானா 1948 ஆம் ஆண்டில் தொழிற்சங்கவாதியாக அரசியலில் நுழைந்தார். 1956 இல் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். 1960 இல் கட்சியின் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக கொழும்பு மாநகரசபை உறுப்பினராகப் பதவியில் இருந்தார். 1994 இல் ஊடகத்துறைத் துணை அமைச்சராக நாடாளுமன்றம் சென்ற அலவி மௌலானா பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளாட்சி சபைகளுக்கான அமைச்சராகவும், பின்னர் 2001 ஆம் ஆண்டில் தொழில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2002 முதல் 2015 வரை மேல் மாகாண ஆளுனராகப் பதவியில் இருந்தார். இலங்கை முசுலிம் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். மௌலானா முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் முசுலிம் விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alavi Moulana passes away". ஏசியன் டிரிபியூன். 15 சூன் 2016. Archived from the original on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
  2. "Alavi Moulana conferred with 'Jana Prasadini', title at his 80th birthday ceremony". ஏசியன் டிரிபியூன். பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2012.
  3. "Alavi Moulana Felicitated". News.lk. Archived from the original on 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2012.
  4. "Seyed Alavi Mowlana Governor – Western Province". Western Province Provincial Council. Archived from the original on 2012-03-29. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலவி_மௌலானா&oldid=3541882" இலிருந்து மீள்விக்கப்பட்டது