கே. சி. லோகேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சி. லோகேஸ்வரன்
K. C. Logeswaran
10-வது வடமேல் மாகாண ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஏப்ரல் 2018
முன்னையவர்அமரா பியசீலி இரத்திநாயக்கா
6வது மேல் மாகாண ஆளுநர்
பதவியில்
23 சனவரி 2015 – 11 ஏப்ரல் 2018
முன்னையவர்அலவி மௌலானா
பின்னவர்ஏமகுமார நாணயக்காரா
தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர்
பதவியில்
டிசம்பர் 1999 – பெப்ரவரி 2003
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்
தொழில்அரசு அதிகாரி

கணபதிப்பிள்ளை கதிரவேல்பிள்ளை லோகேசுவரன் (Kanapathipillai Cathiravelpillai Logeswaran) இலங்கைத் தமிழ் அரச அதிகாரியாவார். இவர் மேல் மாகாண ஆளுநராகப் பணியாற்றினார். தற்போது மேல் மாகாண ஆளுநராக 2018 ஏப்ரல் 12 முதல் பொறுப்பேற்றுள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

லோகேசுவரன் யாழ்ப்பாணம், பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர்.[2][3] பள்ளிப் படிப்பை அடுத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4]

பணி[தொகு]

பட்டப் படிப்பின் பின்னர் லோகேசுவரன் இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.[3] இலங்கையின் வவுனியாவில் 1963 முதல் 1968 வரை பல்வேறு பிரதேச செயலகங்களில் பணியாற்றினார்.[5] 1980 முதல் 1981 வரை யாழ் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றினார்.[4] 1981 அக்டோபரில் வவுனியா மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக 1988 சூலை வரை பணியாற்றினார்.[6] பின்னர் இலங்கைத் தேசியக் காவல்படையின் ஆணையத்தின் செயலர், இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர், இலங்கை நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் எனப் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மூத்த அரச அதிகாரியாகப் பணியாற்றினார்.[3][4][7] 1999 இல் தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு, 2003 பெப்ரவரி வரை மணியாற்றினார்.[4][8]

ஆளுநர்[தொகு]

2015 சனவரி 23 அன்று இலங்கையின் புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன லோகேசுவரனை மேல் மாகாண ஆளூநராக நியமித்தார்.[9][10] 2018 ஏப்ரல் 12 இல் வடமேற்கு மாகாண ஆளுநராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "7 new Governors take oath before President". நியூஸ் ரேடியோ. 12-04-2018. பார்க்கப்பட்ட நாள் 13-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sivathasan, S. (10 ஆகத்து 2013). "My Reminiscences Of St. John’s College, Jaffna". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/my-reminiscences-of-st-johns-college-jaffna/. 
  3. 3.0 3.1 3.2 "SLT Lanka Bell merger off". சண்டே ஒப்சர்வர். 29 பெப்ரவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924112029/http://www.sundayobserver.lk/2004/02/29/bus06.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Annual Report 2003". ஸ்ரீ லங்கா டெலிகொம்.
  5. Wijayadasa, K. H. J. (21 சூலை 2013). "DRO (1939 – 1963) Man for All Seasons". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053322/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84019. 
  6. "Former Government Agents, Vavuniya District". Vavuniya District Secretariat. Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-26.
  7. Hadjirin, Arshad M. (9 மார்ச் 1997). "Postmasters hit by hike". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/970309/newsm.html. 
  8. "Welfare Benefits Board gets new Head". டெய்லிநியூஸ். 28 அக்டோபர் 2003. http://archives.dailynews.lk/2003/10/28/new30.html. 
  9. "Three new governors appointed". டெய்லிமிரர்]. 23 சனவரி 2015. http://www.dailymirror.lk/62019/oneryner. 
  10. "New Governors". டெய்லிநியூஸ். 24 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150125140829/http://www.dailynews.lk/?q=local/new-governors. 
  11. "New Governors take oaths before President Sirisena". The Sunday Times. sundaytimes.lk. 12-04-2018. http://www.sundaytimes.lk/article/1042054/new-governors-take-oaths-before-president-sirisena. பார்த்த நாள்: 12-04-2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._லோகேசுவரன்&oldid=3792252" இலிருந்து மீள்விக்கப்பட்டது