ஆறுமுகன் தொண்டமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறுமுகன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்
பதவியில்
1999 – மே 26, 2020
முன்னவர் சௌமியமூர்த்தி தொண்டமான்
நுவரெலியா மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 ஆகத்து 1994 – 02 மார்ச் 2020
தனிநபர் தகவல்
பிறப்பு (1964-05-29)29 மே 1964
இறப்பு 26 மே 2020(2020-05-26) (அகவை 55)
தலங்கமை மருத்துவமனை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பிற அரசியல்
சார்புகள்
இலங்கை பொதுசன முன்னணி
பிள்ளைகள் நாச்சியார்
விஜி
ஜீவன் தொண்டமான்
இருப்பிடம் யாவத்தை வீதி, கொழும்பு 05
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
பணி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
சமயம் இந்து

சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் (Savumiamoorthy Arumugan Ramanathan Thondaman, மே 29, 1964 - மே 26, 2020) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.[1] இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[2] இவர் 2020 மே 26 இரவு தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் போட்டியிடவிருந்தார்.[3][4]

அரசியலில்[தொகு]

ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுமுகன்_தொண்டமான்&oldid=3683411" இருந்து மீள்விக்கப்பட்டது