உள்ளடக்கத்துக்குச் செல்

ம. ஆ. சுமந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். ஏ. சுமந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். ஏ. சுமந்திரன்
M. A. Sumanthiran
நாடாளுமன்ற உறுப்பினர், சனாதிபதி சட்டத்தரணி
2013 இல் சுமந்திரன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2010–2015
தொகுதிதேசியப் பட்டியல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன்

9 பெப்ரவரி 1964 (1964-02-09) (அகவை 60)
இணுவில், இலங்கை
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
மொனாஷ் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்www.sumanthiran.com

எம். ஏ. சுமந்திரன் என அழைக்கப்படும் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் (Mathiaparanan Abraham Sumanthiran, பிறப்பு: பெப்ரவரி 9, 1964), இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞரும், சனாதிபதி சட்டத்தரணியும் ஆவார்.[1][2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சுமந்திரன் 1964 பெப்ரவரி 9 இல்[2] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம், இணுவிலில் பிறந்தார்.[3][4] இவரது குடும்பம் வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கரவெட்டியைச் சேர்ந்தவர். தாயார் குடத்தனையைச் சேர்ந்தவர்.[4] கொழும்பில் வளர்ந்த சுமந்திரன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார்.[4][5] பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[6] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.[6]

2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இணைய மற்றும் இலத்திரனியல் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6][7]

சுமந்திரன் மெதடிய கிறித்தவர் ஆவார்.[8] இலங்கை மெதடிசத் திருச்சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.[9][10]

சட்டப் பணி[தொகு]

1991 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் சுமந்திரன் உரிமையியல் வழக்குகளில் மீயுயர், மேன்முறையீட்டு, உயர், மற்றும் மாவட்ட நீதிஅமன்றங்களில் வாதாடி வருகிறார்.[6] இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன, மற்றும் இலங்கை கடல்வள சேவைகள் ஆகியவற்றைத் தனியார் மயமாக்கல் போன்றவற்றில் இவர் வெற்றிகரமாக வாதாடியுள்ளார்.[6] அடிப்படை மனித உரிமை மீறல்கள், நாடாளுமன்ற சட்டமூலங்களுக்கான சட்டமீளாய்வு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார்.[6] கொழும்பில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றங்களை இவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.[6][11]

அரசியலில்[தொகு]

சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[12][13][14] 2012 மே மாதத்தில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெளிவிவகார மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டார்.[15][16] 2014 செப்டம்பரில் தமிழரசுக் கட்சியின் இரண்டு உதவிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[17][18][19][20] சுமந்திரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு 58,043 விருப்பு வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளும்ன்றம் சென்றார்.[21][22]

2017 சனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தனர்.[23][24] 2016 திசம்பர் 12 இலும் 2017 சனவரி 13 இலும் மருதங்கேணி அருகே சொரணம்பட்டு-தாளையடி வீதியில் கொலை முயற்சி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[25][26] விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.[23][27][28] ஐந்து சந்தேக நபர்களும் 2017 செப்டம்பரில் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[29] 2018 சூலையில் இவர்கள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.[30][31][32]

2020 நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாம்ளுமன்றம் சென்றார்.[33][34][35] யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 2020 ஆகத்து 6 இல் எண்ணப்பட்டன. இதன்போது பல்வேறு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதங்களும் கைகலப்புகளும் இடம்பெற்றன.[35] ததேகூ வேட்பாளர் சசிகலா ரவிராஜ் (நடராஜா இரவிராஜின் மனைவி) வாக்கு எண்ணப்படுதலில் சுமந்திரன் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.[36][37] சுமந்திரன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.[35][38][39] வாக்குக் கணிப்பீட்டில் கலந்து கொண்ட சுயாதீனமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வாக்குகள் எண்ணப்படும் செயல்முறையை சரியாகப் புரிந்து கொள்ளாமையும், சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டமையுமே இந்த வன்முறைச் சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியது.[40]

தேர்தல் வரலாறு[தொகு]

எம். ஏ. சுமந்திரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2015 நாடாளுமன்றம்[41] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58,043 தெரிவு
2020 நாடாளுமன்றம்[42] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 27,834 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

 1. Behind the Rajapaksa brothers’ smiles Indian Express - August 14, 2009
 2. 2.0 2.1 "Directory of Members: M. A. Sumanthiran". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
 3. "Directory of Members: Sumanthiran, M.A." இலங்கை நாடாளுமன்றம்.
 4. 4.0 4.1 4.2 டி. பி. எஸ். ஜெயராஜ் (28 பெப்ரவரி 2015). "Tamil “Extremists” target Sampanthan and Sumanthiran of the TNA as “Traitors”". டெய்லிமிரர் இம் மூலத்தில் இருந்து 2015-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150302144128/http://www.dailymirror.lk/65031/tamil-extremists-target-sampanthan-and-sumanthiran-of-the-tna-as-traitors. 
 5. "Members of Parliament". தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. Archived from the original on 2015-01-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Sri Lanka public interest lawyer in parliament". Lank Business Online. 21 ஏப்ரல் 2010 இம் மூலத்தில் இருந்து 2014-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140709025737/http://www.lankabusinessonline.com/news/sri-lanka-public-interest-lawyer-in-parliament/1425229555. 
 7. "Post-war Sri Lanka: The Role of International Justice in Ending Military Oppression and Protecting the Rights of Tamil People". ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம். Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-08.
 8. "Church of South India Newsletter" (PDF). Jaffna Diocese of the Church of South India. சூலை 2009. p. 2. Archived from the original (PDF) on 2009-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
 9. "JDCSI Welcomes New Vice President of the Methodist Church". Jaffna Diocese of the Church of South India. Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
 10. Dwight, Richard (10 சூலை 2008). "164th Anniversary celebration: History of the Methodist Church, Wellawatte". டெய்லி நியூஸ். http://archives.dailynews.lk/2008/07/10/fea22.asp. 
 11. "SL Supreme Court issues stay order on expelling Tamils from Colombo lodges". தமிழ்நெட். 8 சூன் 2007. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22411. 
 12. "The 29 national list members for the Seventh Parliament". டெய்லி மிரர்]]. 22 April 2010. http://www.dailymirror.lk/print/index.php/news/news/8714.html. 
 13. "National list MPs nominated: UPFA-17, UNP-09, DNA-02, and ITAK-01". தமிழ்நெட். 21 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31586. 
 14. "The full National List". சண்டே டைம்சு: p. 12. 25 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100425/News/page12.pdf. 
 15. Radhakrishnan, R. K. (27 மே 2012). "Sampanthan re-elected leader of ITAK". தி இந்து. http://www.thehindu.com/news/international/sampanthan-reelected-leader-of-itak/article3462337.ece. 
 16. "TNA on the verge of a split over ITAK". சிலோன் டுடே. 30 மே 2012 இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222223034/http://www.ceylontoday.lk/27-7141-news-detail-tna-on-the-verge-of-a-split-over-itak.html. 
 17. "Mavai replaces Sampanthan as ITAK leader". தமிழ் கார்டியன். 6 செப்டம்பர் 2014. http://tamilguardian.com/article.asp?articleid=12123. 
 18. "Changes In ITAK Top Posts". Asian Mirror. 7 செப்டம்பர் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223020133/http://www.asianmirror.lk/news/item/3299-changes-in-itak-top-posts/3299-changes-in-itak-top-posts. 
 19. டி. பி. எஸ். ஜெயராஜ் (27 சூலை 2013). "Wigneswaran, Senathirajah and the Facade of TNA Unity". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/32960/wigneswaransenathirajah-and-the-facade-of-tna-unity. 
 20. Gammanpila, Udaya (4 ஆகத்து 2013). "TNA's majoritism in minority politics". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222223611/http://www.ceylontoday.lk/76-39291-news-detail-tnas-majoritism-in-minority-politics.html. 
 21. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 22. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 23. 23.0 23.1 D. B. S. Jeyaraj (28 January 2017). "Overseas LTTE-backed plot to assassinate TNA MP Sumanthiran in Jaffna revealed". Daily Mirror. http://www.dailymirror.lk/article/Overseas-LTTE-backed-plot-to-assassinate-TNA-MP-Sumanthiran-in-Jaffna-revealed-122886.html. பார்த்த நாள்: 23 September 2020. 
 24. Srinivasan, Meera (28 January 2017). "Plot to assassinate TNA legislator uncovered". தி இந்து (Chennai, India). https://www.thehindu.com/news/international/Plot-to-assassinate-TNA-legislator-uncovered/article17105855.ece. பார்த்த நாள்: 23 September 2020. 
 25. D. B. S. Jeyaraj (28 January 2017). "Plot to assassinate Sumanthiran: 4 ex-LTTE cadres remanded". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/article/Plot-to-assassinate-Sumanthiran-ex-LTTE-cadres-remanded-122889.html. பார்த்த நாள்: 23 September 2020. 
 26. Balachandran, P. K. (29 January 2017). "Four ex-LTTE cadres held for plotting to assassinate Tamil MP Sumanthiran". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Chennai, India). https://www.newindianexpress.com/world/2017/jan/29/four-ex-ltte-cadres-held-for-plotting-to-assassinate-tamil-mp-sumanthiran-1564747.html. பார்த்த நாள்: 23 September 2020. 
 27. Bastians, Dharisha (1 February 2017). "TID confirms Sumanthiran was target of assassination plot". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/News/tid-confirms-sumanthiran-was-target-of-assassination-plot/56-595245. பார்த்த நாள்: 23 September 2020. 
 28. "Police Counter Terrorism Unit warns of LTTE resurgence". Sunday Times (Colombo, Sri Lanka). 12 February 2017. http://www.sundaytimes.lk/170212/columns/lack-of-direction-in-issues-related-to-defence-and-security-228102.html. பார்த்த நாள்: 23 September 2020. 
 29. "Attempted murder of Sumanthiran: Suspects granted bail". Daily News (Colombo, Sri Lanka). 21 September 2017. http://www.dailynews.lk/2017/09/21/law-order/128914/attempted-murder-sumanthiran-suspects-granted-bail. பார்த்த நாள்: 23 September 2020. 
 30. Bastians, Dharisha (31 January 2017). "TID arrests another suspect in plot to assassinate Sumanthiran". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/article/594983/TID-arrests-another-suspect-in-plot-to-assassinate-Sumanthiran. பார்த்த நாள்: 23 September 2020. 
 31. "Assassination plot against Sumanthiran : Indictments to be served in Colombo High Court tomorrow". Sunday Observer (Colombo, Sri Lanka). 29 July 2018. https://www.sundayobserver.lk/2018/07/29/news/assassination-plot-against-sumanthiran-indictments-be-served-colombo-high-court. பார்த்த நாள்: 23 September 2020. 
 32. "Charge sheets filed against 5 under PTA, in the Attempted Murder case of Sumanthiran". Tamil Diplomat (London, U.K.). 30 July 2018. http://tamildiplomat.com/charge-sheets-filed-5-pta-attempted-murder-case-sumanthiran/. பார்த்த நாள்: 23 September 2020. 
 33. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
 34. "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 23 September 2020. 
 35. 35.0 35.1 35.2 D. B. S. Jeyaraj (15 August 2020). "Did Sumanthiran Win In Jaffna By “Stealing” Sashikala’s Votes?". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/Did-Sumanthiran-Win-In-Jaffna-By-Stealing-Sashikalas-Votes/172-193895. பார்த்த நாள்: 23 September 2020. 
 36. "Claims of foul-play over preferential vote count in Jaffna after late night recount". Tamil Guardian. 6 August 2020. https://www.tamilguardian.com/content/claims-foul-play-over-preferential-vote-count-jaffna-after-late-night-recount. பார்த்த நாள்: 24 September 2020. 
 37. "Sumanthiran alleged of exerting Colombo’s influence to tamper with preferential vote counts". தமிழ்நெட். 8 August 2020. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39913. பார்த்த நாள்: 24 September 2020. 
 38. "Clash at Jaffna counting centre; Row over votes for Sumanthiran and Sasikala". Sunday Times (Colombo, Sri Lanka). 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/columns/clash-at-jaffna-counting-centre-row-over-votes-for-sumanthiran-and-sasikala-411860.html. பார்த்த நாள்: 24 September 2020. 
 39. "Sumanthiran’s response to allegations made concerning the TNA preferential count in Jaffna". NewsWire (Nugegoda, Sri Lanka). 7 August 2020. http://www.newswire.lk/2020/08/07/sumanthirans-response-to-allegations-made-concerning-the-tna-preferential-count-in-jaffna/. பார்த்த நாள்: 24 September 2020. 
 40. Kuruwita, Rathindra (8 August 2020). "Bloody rumpus at Jaffna Central College blamed by CMEV on lack of understanding of counting process". தி ஐலண்டு (Colombo, Sri Lanka). https://island.lk/bloody-rumpus-at-jaffna-central-college-blamed-by-cmev-on-lack-of-understanding-of-counting-process/. பார்த்த நாள்: 24 September 2020. 
 41. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 23 September 2020. 
 42. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 23 September 2020. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._ஆ._சுமந்திரன்&oldid=3901638" இலிருந்து மீள்விக்கப்பட்டது