ஏ. ஆர். எம். அப்துல் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அப்துல் காதர்
நா.உ
கூட்டுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
2001–2004
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2001
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2004
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 10, 1936(1936-10-10)
இறப்பு அக்டோபர் 3, 2015 (அகவை 78)
கண்டி, இலங்கை
தேசியம் இலங்கைச் சோனகர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி
பணி வணிகர்

ஏ. ஆர். எம். அப்துல் காதர் (30 அக்டோபர் 1936 - 3 அக்டோபர் 2015)[1] இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.[2] இவர் கூட்டுறவுத்துறை அம் ஐச்சராகவும்,[3] சுற்றாடல் துறைப் பிரதி அமைச்சராக இருந்தவர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

2004 ஆகத்து மாதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டு,[4] 2004 நவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்டியில் வசித்து வந்த இவர் ஒரு வணிகர் ஆவார். இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abdul Cader no more". டெய்லிமிரர் (3 அக்டோபர் 2015). பார்த்த நாள் 3 அக்டோபர் 2015.
  2. Parliament profile
  3. BBC News | SOUTH ASIA | Sri Lanka cabinet list
  4. Online edition of Daily News - News
  5. Online edition of Daily News - News