பவான் நடவடிக்கை
பவான் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர் | |||||||
யாழ்ப்பாணப் போரின் போது T-72 தாங்கியில் இந்தியப் படையினர் | |||||||
| |||||||
அணிகள் | |||||||
இந்திய அமைதி காக்கும் படை | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
இழப்புக்கள் | |||||||
600 | 200 | ||||||
|
பவான் நடவடிக்கை 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தும் நோக்கில், இந்திய அமைதிகாக்கும் படையால் யாழ்ப்பாணத்தை தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்டு புலிகளின் போர்க் கருவிகளைக் களைவதற்காக 1987 பிற்பகுதியில் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு வழங்கப்பட்டப் பெயராகும்.பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் இருந்தும், விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பல முனைகளில் இருந்தும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மூன்று கிழமையளவு நடைபெற்ற கொடுரமான போரின் பின்னர் இந்திய அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தால் 3 ஆண்டுகளாக முயன்றும் முடியாமல் போன யாழ் குடாநாட்டை கைப்பற்றினர். நடவடிக்கையின் போது இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இதன் போது இந்திய அமைதிகாக்கும் படையில் 600 பேர் சாவடைந்தனர்.[1] புலிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சரியான தகவல்கள் இல்லை.
இந்நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினதும் பங்களிப்புகள் கணிசமான அளவு காணப்பட்டது. இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம் அக்டோபர் 1987 இல் இலங்கையின் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன. [2]. இந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (MARCOS) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன.[3] அக்டோபர் 21 1987 சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர்.
35 நாட்கள் ஊரடங்கு உத்தரவு
[தொகு]இலங்கையின் சரித்திரத்திலேயே அதிக நாட்களைக் கொண்ட ஊரடங்கு உத்தரவு, இந்திய அமைதி காக்கும் படையினரால் பிறப்பிக்கப்பட்டது. யாழ் குடா நாட்டினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முப்பத்து ஐந்து நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இவ்வூரடங்கு உத்தரவின்படி, இத்தகு நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல்ரீதியாக கிடைக்கப்பெற்ற உத்தரவுகளிற்கேற்ப மேற்கொள்ளப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Operation Pawan. The Battle for Jaffna". Archived from the original on 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2007-11-06.
- ↑ "India.Marine Commando Force.Special Operations.Com". Archived from the original on 2012-07-05. பார்க்கப்பட்ட நாள் 2007-11-06.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987
- இந்திய அமைதி காக்கும் படையின் யாழ் பல்கலைக்கழகத் தாக்குதல், 1987
- இந்திய அமைதி காக்கும் படையின் யாழ் மருத்துவமனைப் படுகொலைகள், 1987
- இந்திய அமைதி காக்கும் படையின் வல்வெட்டித்துறைப் படுகொலைகள், 1989
- இந்திய அமைதி காக்கும் படையின் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்