பேச்சு:பவான் நடவடிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியை (தேதி, ஆண்டு) அறிந்து கட்டுரையில் குறிப்பிடுங்கள். இல்லாவிடின் கட்டுரை முழுமை பெறாது. நன்றி.--Kanags \பேச்சு 08:11, 28 ஏப்ரல் 2008 (UTC)


கட்டுரையில் பல பிழைகள் உணமையாக்கப்பட்டுள்ளன. ஆங்கில விக்கியினைப் பார்த்து அப்படியே இங்கு போடுவது சரியல்ல ஆங்கில விக்கியில் சிங்களவர்கள் முகமாலையில் தங்களின் 50 பேர்களே இறந்தார் என பி பி சி செய்தி நிறுவனத்தில் கூறியது போல உள்ளது இக்கட்டுரை. பல பிழைகள்......... உணமை நிலைக்காது போலல்லவா உள்ளது. தமிழ விக்கியில்.....--நிரோஜன் சக்திவேல் 05:51, 29 ஏப்ரல் 2008 (UTC)

நிரோ இக்கட்டுரை இரண்டு தசாப்தங்களுக்கு முந்தையது என்பதினால் சரிபார்பது கடினம். தமிழ் விக்கிபீடியா ஒரு தனிப்பட்ட கருத்து ஊடாகம் அல்லது தாங்கள் பிழையைக் கண்டுபிடித்தால் தாராளமாகத் திருத்துங்கள். ஆங்கில விக்கிபீடியாவில் பிழைவிட்டால் நாங்களும் பிழை விடவேண்டியது இல்லைத்தானே--உமாபதி \பேச்சு 08:26, 29 ஏப்ரல் 2008 (UTC)

விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதப்படும் போது நடுநிலைமையுடன் எழுதப்படவேண்டும். நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது நடந்த உண்மையை அப்படியே எழுத வேண்டும். இதற்குச் சான்றாக தக்க ”நடுநிலையான” மூலங்களின் ஆதரம் தரப்படவேண்டும். இராணுவ நடவடிக்கைகளின் போது நடந்த உண்மைய நாம் அறிவது சிரமம். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சண்டையிடும் இரு தரப்பினரே இதற்கு சாட்சிகளாக உள்ளனர் (இவர்களது வாக்குமூலம் பக்கச்சார்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை). நிகழ்வின் பின்னர் இவர்களது வாக்குமூலங்களைக் கொண்டே இந்த ”நடுநிலையான” மூலங்கள் செய்தி வெளியிடுகின்றன. எனவே இந்த பக்கச்சார்பு கட்டுரைகளில் தோன்றாமலிருக்க விக்கிபீடியா தொகுப்பாளர்கள் இரண்டு பக்க வாதங்களை வைப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றை முக்கியப்படுத்தி அதுதான் சரியென்ற வாதம் தவிக்கு பங்கம் விளைவிக்கும். //கட்டுரையில் பல பிழைகள் உணமையாக்கப்பட்டுள்ளன.// இங்கே கூறப்பட்டுள்ளவற்றுக்கு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் இந்திய படைத்துறை இணையங்களின் (சண்டையில் பங்கு தாரர்) என்பதை நான் அறிவேன். மற்றைய தரப்புக்கான கருத்துக்களை ஆதரங்களுடன் கட்டுரையில் இணையுங்கள். (எ+கா: 45 விடுதலைப்புலிகளை கொன்றதாக இந்திய அமைதிகாக்கும் படை தெரிவித்தது(ஆதாரம்1) ஆனால் புலிகள் இதை மறுத்து 5 விடுதலைப்புகளும் 20 பொதுமக்களும் கொல்லபட்டதாக தெரிவித்தனர் (ஆதரம் 2) பன்னாட்டு செய்திநிறுவனக்கள் 5 பொதுமக்களின் உடல்களை கண்டதாக தெரிவித்துள்ளனர் (ஆதரம்3) ) இலங்கை இனப்பிரச்சினைச் சார்பான கட்டுரைகளில் நடுநிலைமையையும் உணர்ச்சிகளை முன்னிறுத்தாமல் ஆதாரங்கள் முன்னிறுத்தி செய்வது தான் தகும்.//ஆங்கில விக்கியில் சிங்களவர்கள் முகமாலையில் தங்களின் 50 பேர்களே இறந்தார் என பி பி சி செய்தி நிறுவனத்தில் கூறியது போல உள்ளது இக்கட்டுரை.// எதை யார் சொல்கிறார்களோ அதை அப்படியே கட்டுரையில் எழுதுவதில் என்ன தப்பு. //பல பிழைகள்......... உணமை நிலைக்காது போலல்லவா உள்ளது. தமிழ விக்கியில்.....// உண்மைகளை ஆதரங்களுடன் முன்னிறுத்துங்கள். உண்மை நிலைக்கும்.--Terrance \பேச்சு 12:30, 29 ஏப்ரல் 2008 (UTC)

நீங்கள் கூறியிருப்பது போல் இந்திய இராணுவத்தினரின் இணையத்தில் உள்ள செய்தியினை ஆதாரமாக வைப்பது எவ்வளவுக்கு உணமையோ நான் கனடாவில் வெளிவரும் உலகத்தமிழர் பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் எவ்வளவு உண்மையோ யாருக்கும் தெரியாது ஆனாலும் இவ்வாறு பத்திரிகைகளில் எடுத்த செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் எவ்வாறு விக்கியில் ஆதாரம் இணைப்பது தெரிந்தால் கூறுக.. ஆனாலும் என்னுடன் என் வேலைத் தளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தனது கணகளால் இந்திய இராணுவம் ஒரு பிராமணரை தலையில் சுட்டுக் கொன்றதைப் பார்த்தாகவும் மேலும் இன்னொருவர் இலங்கை இராணுவத்தின்ரால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு முகத்திற்குத் தீயூட்டப்பட்டதனையும் பாரத்ததகக் ஊறினார். இவைகளை எவ்வாறு நான் ஆதாரத்துடன் இங்கு பதிவது...சொன்னவர்களின் பெயர்களைக் குறிக்க வேண்டுமா அல்லது எந்த வகையில் இவ்வாதாரங்களை உங்கலூக்கு இணைப்பது என்பதனை தயவுகூர்ந்து விளக்குக தெரன்ஸ்--நிரோஜன் சக்திவேல் 16:17, 29 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவான்_நடவடிக்கை&oldid=236325" இலிருந்து மீள்விக்கப்பட்டது