கறுவாத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கறுவாத் தோட்டம்
කුරුඳු වත්ත
நாடு இலங்கை
மாநிலம் மேல் மாகாணம்
மாவட்டம் கொழும்பு மாவட்டம்
நேர வலயம் இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு 00700 [1]

கறுவாத் தோட்டம் (Cinnamon Gardens, சிங்களம்:කුරුඳු වත්ත) இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஓர் நகரப்பகுதியாகும். கொழும்பு நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முன்பிருந்த கறுவாத் தோட்டத்தை ஒட்டி இப்பகுதிக்கு பெயர் எழுந்தது. 1789ஆம் ஆண்டில் இப்பகுதியில் 289 acres (1.17 km2) பரப்பளவில் கறுவா மரங்கள் இருந்தன. இன்று இலங்கைப் பிரதமரின் அலுவலகம், விடுதலைச் சதுக்கம், கொழும்பு நகர மன்றம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ளன. மேலும் பல வெளிநாட்டு தூதரகங்களும் பேராளர் உயர் ஆணையர் அலுவலகங்களும் அமைந்துள்ளன. நாட்டின் உயர்ந்த மனிதர்களின் இல்லங்களும் மரங்களணைந்த சாலைகளில் காணப்படுகின்றன. [2] [3][4] கொழும்பின் வானியல் துறையும் ஆய்வகமும் இங்குள்ளது.[5]

ஒளிப்பட காட்சியகம்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. https://mohanjith.net/postal_codes/western/colombo/00700-cinnamon-gardens.html
  2. http://www.worldportsource.com/ports/LKA_Port_of_Colombo_44.php
  3. http://www.lankainfo.com/travelinformation/cinnamongarden.htm
  4. http://www.imagesofasia.com/html/srilanka/cinnamon-gardens.html
  5. http://wikimapia.org/1606260/Colombo-Meteorological-Observatory
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுவாத்_தோட்டம்&oldid=2157419" இருந்து மீள்விக்கப்பட்டது