கொம்பனித் தெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொம்பனித்தெரு

කොම්පඥ්ඥ වීදිය

Slave Island
பெய்ரா ஏரியும் கொம்பனித் தெருவும்
பெய்ரா ஏரியும் கொம்பனித் தெருவும்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)

கொம்பனித் தெரு (Slave Island) இலங்கையின் கொழும்பிலுள்ள ஒரு நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் கோட்டைப் பகுதிக்கு நேர் தெற்கில் உள்ளது. முந்தைய போர்த்துகேய, டச்சுக் காலங்களில் இங்கு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொணரப்பட்டு வைக்கப்பட்டதை ஒட்டி பிரித்தானியக் குடியேற்றத்தின்போது இப்பகுதி அடிமைகள் தீவு என அழைக்கப்பட்டது. பெரும்பாலான ஆப்பிரிக்க அடிமைகள் தங்கள் நாடு திரும்பியபோதிலும் மிகச்சிலரின் வழித்தோன்றல்கள் இன்னமும் இலங்கையின் பல பகுதிகளில் பரவியுள்ளனர். இவர்கள் இலங்கை காப்பிலி என அழைக்கப்படுகின்றனர். இப்பகுதி பல தங்குவிடுதிகளும் அங்காடி வளாகங்களும் கொண்டு ஒரு வணிகப்பகுதியாக விளங்குகிறது. இங்கு பெரிய ஏரியான பெயரா ஏரி அமைந்துள்ளது; பலரும் நடைப்பயிற்சிக்காக இந்த ஏரிக்கரையோர சாலையை நாடுகின்றனர்.

கொம்பனித்தெரு முத்தையா பூங்காவில் உள்ள கங்காராமை பௌத்த கோவில்
கங்காராமை கோயில் உள்ள புத்த சிலைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பனித்_தெரு&oldid=2232032" இருந்து மீள்விக்கப்பட்டது