தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு
Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre logo
தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு
முகவரிநெலும் பொக்குன மாவத்தை
நகரம்கொழும்பு 07
நாடுஇலங்கை
கட்டிடக்கலைஞர்ககவிட்ட டி சில்வா அண்ட் அசோசியட்ஸ்[1][2]
உரிமையாளர்இலங்கை அரசாங்கம்
திறப்பு15 திசம்பர் 2011
www.lotuspond.lk

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு (Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre)[3] (தாமரைத் தடாக அரங்கு என பொதுவாக அழைக்கப்படுவது; முன்பு தேசிய இசையரங்கு கலைகள் அரங்கு என அழைக்கப்பட்டது) என்பது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையம். இது 15 திசம்பர் 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது[4]

இதன் அமைப்புப் பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2,430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. சீனாவின் யங்யுவான் என்ற நிறுவனம் கட்டிட அமைப்பு வேலையைப் பொறுப்பேற்று 2008ம் ஆண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது.

தாமரை மலரின் வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கலையரங்கு மூன்று அரங்க மாடிகளைக் கொண்டதுடன், 1288 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் 70 கலைஞர்கள் வரையில் மேடையேற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மேடையேற்றக்கூடிய 4 மேடைகள் 690 சதுர மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளன.

பராக்கிரமபாகு மன்னனின் தாமரைத்தடாகம்[தொகு]

பாராக்கிரமபாகு மன்னனால் பொலனறுவைக் காலத்தில் கட்டப்பட்ட தாமரைத்தடாகத்தின் வடிவத்தை ஒத்ததாக இத் தாமரைத் தடாகக் கலையரங்கு காணப்படுகின்றது. பராக்கிரமபாகு மன்னனின் தாமரைத்தடாகம் கருங்கற்பாறைகளால் பொழியப்பட்டு கட்டப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Selected Projects". Kahawita De Silva & Associates. பார்த்த நாள் 2011-12-04.
  2. "Design Awards". Kahawita De Silva & Associates. பார்த்த நாள் 2011-12-04.
  3. Alwis, Harsha. "Nelum Pokuna Performing Arts Theatre Opens Today". DM Graphics Desk. பார்த்த நாள் 2011-12-15.
  4. "Nelum Pokuna". Daily Mirror. 2011-12-15. http://www.dailymirror.lk/caption-story/15485-nelum-pokuna.html. பார்த்த நாள்: 2011-12-15. 

வெளி இணைப்புக்கள்[தொகு]