உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சிகாவத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சிகாவத்தை
நகர்ப்பகுதி
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)
அஞ்சல் குறியீடு
01000 [1]

பஞ்சிகாவத்தை (Panchikawatte) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். கொழும்பு 10 என்றழைக்கப்படும் வலயத்தினுள் அமைந்துள்ளது. அஞ்சல் குறியீடு 01000 ஆகும். வண்டி உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள், வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையங்கள் இங்கு அதிக அளவில் காணப்படுகின்றன. டவர் மண்டபம் எனப்படும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும் மண்டபமும் ஆர். பிரேமதாச அரங்கம் எனப்படும் பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கமும் இங்கு காணப்படுகின்றன. இங்கு சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவில் சமனாக காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சிகாவத்தை&oldid=3099535" இலிருந்து மீள்விக்கப்பட்டது