தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993
Jump to navigation
Jump to search
தவளைப் பாய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும். தரையிலும் கடலிலும் நிகழ்ந்ததால் இது தவளைப் பாய்ச்சல் என்று பெயரிடப்பட்டது.
நான்கு நாட் தாக்குதலின் பின்னர் படையினர் பின்வாங்கிச் சென்றனர். 469 போராளிகள் அத்தாக்குதலின் போது மரணமடைந்தனர். நாகதேவன்துறையிலிருந்து ஐந்து விசைப்படகுகளும் போர் டாங்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.