கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் என்பது இலங்கையை பிரித்தானியர் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இலங்கை அரசியல் நிர்வாக முறையில் பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமாகும். இது 1833 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இச்சீர்திருத்தம் கோல்புறூக், கமரன் ஆகியோரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி சட்டசபை அமைப்பு[தொகு]

 • சட்டசபை - 15 உறுப்பினர்கள்
  • உத்தியோகப்பற்றுள்ளவர் - 9 உறுப்பினர்கள்
  • உத்தியோகப்பற்றற்றவர்கள் - 6 உறுப்பினர்கள்
   • ஐரோப்பியர்கள் - 3
   • பறங்கியர் - 1
   • தமிழர் - 1
   • சிங்களவர் - 1

கோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி இலங்கையில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. இதில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ளவர்கள். சபையில் உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர் உத்தியோகப்பற்றற்றஎஎடெடெடெடடவர்களாக இருந்தனர்.

1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. கண்டிச் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது. சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. சட்ட நிர்வாகக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் முறையே கொழும்பு அரசாங்க அதிபர், தனாதிகாரி, நிலஅளவை அதிகாரி, கணக்காய்வாளர், வருமானவரி அதிகாரி என்போராவர்.

கோல்புறூக் சீர்திருத்தத்தின் பிரதிபலன்கள்[தொகு]

 • இச்சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டசபை, பின்னாட்களில் பாராளுமன்றம் உருவாவதற்கு வழிவகைத்தது.
 • பிரதிநிதித்துவ அரசியல் என்கிற அம்சத்தை இச்சீர்திருத்தம் இலங்கையில் ஆரம்பித்துவைத்தது.
 • ஆங்கிலக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையானது, ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்ற, பிருத்தானிய அரசியல் சமூக விவகாரங்களை நன்கு அறிந்த ஒரு சுதேசிய மத்தியதர வர்க்கம் உருவாக வழியமைத்தது.
 • இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டமை பிற்கால இன முரண்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்தது.
 • பெருந்தோட்டத்துறையில் அறிமுகம் இலங்கையில் இரட்டை பொருளாதார அமைப்பை தோற்றுவித்து விவசாயத்துறை பாதிக்கப்படுவதற்கு வழியமைத்தது.
 • ஆங்கிலக்கல்வி அறிமுகம், ஆங்கில கலாசார செல்வாக்கினை ஏற்படுத்தியது.