உள்ளடக்கத்துக்குச் செல்

மு. ஹு. மு. அஷ்ரப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். எச். எம். அஷ்ரப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மு. ஹு. மு. அஷ்ரப்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
பதவியில்
1981–2000
துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
1994–2000
இலங்கை நாடாளுமன்றம்
அம்பாறை
பதவியில்
1989–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-10-23)அக்டோபர் 23, 1948
சம்மாந்துறை, இலங்கை
இறப்புசெப்டம்பர் 16, 2000(2000-09-16) (அகவை 51)
அரநாயக்க, இலங்கை
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
துணைவர்பேரியல் இஸ்மாயில் அஷ்ரப்
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
கொழும்புப் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்

முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் (MHM Ashraff, ஒக்டோபர் 23, 1948 - செப்டம்பர் 16, 2000) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 அக்டோபர் 23 இல் அஷ்ரப் ஒரே புதல்வனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள். கல்முனைக்குடியில் வாழ்ந்து வந்த தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும், கல்முனை உவெசுலி கல்லூரியிலும் தொடர்ந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றிய அஷ்ரப், பேரியல் இசுமாயில் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் மகன் உள்ளார்.

1980களில் அஷ்ரபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சக மேம்பாட்டுக்கான இயக்கமாக காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எழுதிய நூல்கள்

[தொகு]

நான் எனும் நீ - கவிதை நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஹு._மு._அஷ்ரப்&oldid=3960006" இலிருந்து மீள்விக்கப்பட்டது