உள்ளடக்கத்துக்குச் செல்

பேராதனைப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 7°15′15″N 80°35′48″E / 7.25417°N 80.59667°E / 7.25417; 80.59667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராதனைப் பல்கலைக்கழகம்
University of Peradeniya
පේරාදෙණිය විශ්ව විද්‍යාලය
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சின்னம்
குறிக்கோளுரைசர்வசுவ லோகணம் சாத்திரம் (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
அறிவு அனைவரையும் நோக்கிய கண்
வகைபொது
உருவாக்கம்1942 இலங்கைப் பல்கலைக்கழகம்
1972 இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்
1978 பேராதனைப் பல்கலைக்கழகம்
நிதிக் கொடைஇரூ 2.265 பில்லியன் [1]
வேந்தர்பேரா. பி. டபிள்யூ. ஏப்பசிங்க
துணை வேந்தர்பேரா. எல். திசாநாயக்க
கல்வி பணியாளர்
731
நிருவாகப் பணியாளர்
2,973
மாணவர்கள்11,065 [a]
பட்ட மாணவர்கள்9,605 [b]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,440 [c]
அமைவிடம்,
வளாகம்புறநகர்
700 எக்டேர்கள்
வெளியீடு(கள்)Ceylon Journal of Science
Sri Lanka Journal of Humanities and Social Sciences
தடகள விளையாட்டுகள்30 தடகள அணிகள்
சேர்ப்புஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.pdn.ac.lk

பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கையின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இலங்கையின் கடைசி இராசதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையில், பேராதனை என்னும் இடத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையின் முதல் பல்கலைக்கழகத்தின் இன்றைய வாரிசாக விளங்குவதும் இதுவே. பல்கலைக்கழகத்திற்கான நிதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) வழங்கப்படுகின்றது.

அமைவிடம்

[தொகு]

இப்பல்கலைக்கழகம் இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை இயற்கை அழகு நிறைந்த ஒரு பகுதியாகும். இலங்கையின் சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவும் இங்கு அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது ஹந்தானை மலையை அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு இருக்கின்றது. இலங்கையின் மத்திய மலைநாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சிறந்த எழுத்தாளரான பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர போன்றவர்களின் நினைவுகளைத் தாங்கிய நினைவுச் சின்னமாகவும் இது விளங்குகின்றது.

வரலாறு

[தொகு]

இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Ceylon) என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1952 ஆகஸ்ட் 6 ஆம் நாள், இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது[1] பரணிடப்பட்டது 2011-01-16 at the வந்தவழி இயந்திரம். அன்றிலிருந்து 1972 வரை இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டு வந்தது. 1972 இல், இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டபோது, இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka – Peradeniya Campus) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக்கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெற்றது.

பீடங்கள்

[தொகு]

இங்கே விவசாய பீடம், கலைப் பீடம், பல்மருத்துவப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவப் பீடம், விஞ்ஞான பீடம், என்பவற்றுடன் கால்நடை மருத்துவமும், கால்நடை அறிவியலும் இணைந்த ஒரு பீடமும் உள்ளன [2] பரணிடப்பட்டது 2010-07-08 at the வந்தவழி இயந்திரம்.

உசாத்துணை

[தொகு]
  1. "University System at a Glance". இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு. 2009. Archived from the original on 2010-04-18. பார்க்கப்பட்ட நாள் 2010-05-24.

வெளியிணைப்புகள்

[தொகு]