புதிய சனநாயக முன்னணி (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய ஜனநாயக முன்னணி
சிங்களம் nameනව ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ
ஆங்கிலம் nameNew Democratic Front
தலைவர்ஆரியவன்ச திசாநாயக்கா
செயலாளர்சாமிளா பெரேரா
பிரிவுசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
தலைமையகம்9/6 ஜெயந்தி மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை
தேசியக் கூட்டணிஐக்கிய தேசிய முன்னணி
தேர்தல் சின்னம்
அன்னம்
இலங்கை அரசியல்

புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front (NDF)) என்பது இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் புதிதாக உருவான ஓர் அரசியல் கட்சி ஆகும். ஆரியவன்ச திசாநாயக்க என்பவர் இதன் தலைவர்[1]. இக்கட்சியின் சின்னம் அன்னம்[2].

அரசுத்தலைவர் தேர்தல் 2010[தொகு]

முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா இக்கட்சியின் சார்பில் 2010, சனவரி 26 இல் இடம்பெற்ற இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய வேட்பாளராகப் போட்டியிட்டார்.[3][4]. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட[5][6] இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.[7] சரத் பொன்சேகா இத்தேர்தலில் 40.15% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவிடம் தோற்றார்.

அரசுத்தலைவர் தேர்தல் 2015[தொகு]

2015 சனவரி 8 இல் நடைபெறவிருக்கும் 7வது அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை எதிர்த்து இக்கட்சியின் தேர்தல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு 51.28% வாக்குகளுடன் வெற்றி பெற்று 7வது அரசுத் தலைவரானார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Attacks on media: The story unfolds". The Sunday Times. 13 December 2009. http://www.sundaytimes.lk/091213/Columns/political.html. பார்த்த நாள்: 4 January 2010. 
  2. "Gen Fonseka signs nomination papers". The Times. 15 December 2009 இம் மூலத்தில் இருந்து 3 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120903101001/http://sundaytimes.lk/cms/articleXYZ100000010.php?id=4722. பார்த்த நாள்: 4 January 2010. 
  3. "Presidential Elections - 2010". Department of Elections of Sri Lanka. 17 December 2009. Archived from the original on 9 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "New Democratic Front hands over deposit money". Daily News. 12 December 2009 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605033709/http://www.dailynews.lk/2009/12/12/pol20.asp. பார்த்த நாள்: 3 January 2010. 
  5. "Sarath Fonseka visits Jaffna seeking Tamils' votes". TamilNet. 2 January 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30925. பார்த்த நாள்: 3 January 2010. 
  6. Amaranayake, Vindhya. "Record number of candidates". The Bottom Line இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091219162050/http://www.thebottomline.lk/2009/12/16/news34.html. பார்த்த நாள்: 3 January 2010. 
  7. "Defending Democracy". Daily News. 4 January 2010 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100113112311/http://www.dailynews.lk/2010/01/04/main_Editorial.asp. பார்த்த நாள்: 4 January 2010. 
  8. "Maithri makes deposit; Contests under ‘swan'". டெய்லிமிரர். 2 டிசம்பர் 2014. http://www.dailymirror.lk/57907/maithri-makes-deposit-contests-under-swan. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2014. 
  9. "Maithripala Sirisena deposits bond to contest under swan symbol". News First. 2 December 2014 இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170809211815/http://newsfirst.lk/english/2014/12/maithreepala-sirisena-deposits-bond-symbol-sworn/65472. பார்த்த நாள்: 2 December 2014.