உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை லிபரல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிபரல் கட்சி
Liberal Party
ලිබරල් පක්ෂය
தலைவர்கமால் நிசங்க
தொடக்கம்1987
முன்னர்தாராண்மைவாத சனநாயகப் பேரவை
கொள்கைதாராண்மையியம்
தேசியக் கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பன்னாட்டு சார்புபன்னாட்டு தாராண்மைவாதம், ஆசிய தாராண்மைவாதிகள் மற்றும் சனநாயகவாதிகளின் பேரவை
இலங்கை நாடாளுமன்றம்
1 / 225
தேர்தல் சின்னம்
Book
இணையதளம்
liberalparty-srilanka.org

இலங்கை லிபரல் கட்சி (Liberal Party of Sri Lanka) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1981 ஆம் ஆண்டில் தேசிய சனநாயகப் பேரவை என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த சானக அமரதுங்க என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களை ஆறு ஆண்டுகளுக்குத் தளிப்போடுவதற்காக பொது வாக்கெடுப்பை நடத்தியதை அடுத்து 1982 ஆம் ஆண்டில் சானக்க அமரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, இலங்கையில் தாராண்மையியத்தை வலுப்படுத்த முயற்சிகளில் இறங்கியது. குறிப்பாக, பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம், நடுவண் ஆட்சியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது போன்ற கொள்கைகளை வலியுறுத்தி, 1987 பெப்ரவரியில் லிபரல் கட்சியை ஆரம்பித்தார்.

1996 ஆம் ஆண்டில் அமரதுங்க வாகன விபத்து ஒன்றில் சிக்கி இறந்ததை அடுத்து, அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறைந்து போயிற்று. ஆனாலும், அமரதுங்கவுக்குப் பின்னர் கட்சித் தலைவர் பதவியை ஏற்ற ராஜீவ விஜேசிங்க 1999 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 15 போட்டியாளர்களில் ஆறாவதாக வந்தார். இக்கட்சியின் தற்போதைய ட்ய்ஹலைவர் கமால் நிசங்க ஆவார்.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Liberal Party Sri Lanka. "Contact Us". The Liberal Party Sri Lanka. http://www.liberalparty-srilanka.org/contact-us.html. பார்த்த நாள்: 25 சூலை 2011. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_லிபரல்_கட்சி&oldid=2211817" இலிருந்து மீள்விக்கப்பட்டது