இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி
Lanka Sama Samaja Party (Revolutionary)
தொடக்கம்1964
பிரிவுலங்கா சமசமாஜக் கட்சி
செய்தி ஏடுFight, Samasamajist
கொள்கைதுரொட்ஸ்கியிசம்
பன்னாட்டு சார்புநான்காம் அனைத்துலகம்
இலங்கை அரசியல்

இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி (Lanka Sama Samaja Party (Revolutionary)) என்பது துரொட்ஸ்கிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். 1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி நான்காம் அனைத்துலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. லங்கா சமசமாசக் கட்சி தேசிய அரசில் இணைவதை எதிர்த்த அக்கட்சியின் சில கடுமைவாதிகள் சிலர் நான்காம் அனைத்துலகத்துடன் நல்லுறவைப் பேண விரும்பியவர்களாய் புதிய கட்சியை ஆரம்பித்தனர். நான்காம் அனைத்துலகம் இக்கட்சியைத் தமது இலங்கைப் பிரதிநிதியாக அறிவித்தது.

புரட்சிகர சமசமாசக் கட்சியின் நிறுவனர்களில் லங்கா சமசமாசக் கட்சியின் 14 மத்திய குழு உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான எட்மண்ட் சமரக்கொடி, மெரில் பெர்னாண்டோ ஆகியோரும் அடங்குவர். ஏனைய முக்கிய தலைவர்கள் வி. காராளசிங்கம், தொழிற்சங்கவாதி பாலா தம்பு ஆகியோர் ஆவர்.

உட்பூசல் காரணமாக புரட்சிகர சமசமாசக் கட்சி நாளடையில் உடைந்து போனது. 1964 திசம்பர் 3 இல் இக்கட்சியின் நாடாளுமன்றக் குழு வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களுடனும் இணைந்து அன்றைய சுதந்திரக் கட்சி அரசுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. இதையடுத்து சுதந்திரக் கட்சி அரசு கவிழ்க்கப்பட்டது. இதன் காரணமாக வி. காராளசிங்கம், அவருடன் சக்தி பிரிவு கட்சியில் இருந்து விலகி மீண்டும் லங்கா சமசமாசக் கட்சியில் சேர்ந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]