விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி
ஆங்கிலம் namePeople's Front of Liberation Tigers
செயலாளர்யோகி
தொடக்கம்1989
பிரிவுதமிழீழ விடுதலைப் புலிகள்
கட்சிக்கொடி
புலி
இலங்கை அரசியல்

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகும். இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விடுதலை புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரத்தினம் யோகி பொதுச் செயலாளராகவும் செயற்பட்டனர். இக்கட்சியின் சின்னமாக புலி காணப்பட்டது. இக்கட்சி இலங்கையில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தது. பின்னர் 2012 பெப்ரவரியில் ஆண்டுதோறும் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினால் இலங்கையின் தேர்தல் ஆணையாளரினால் இக்கட்சியின் பதிவு இரத்துச் செய்யப்பட்டது[1].

இக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1990 பெப்ரவரி 24 முதல் மார்ச்சு 1 வரை வாகரையில் இடம்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 3 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து, தமிழ்மிரர், 01 பெப்ரவரி 2012