உலக சோசலிச வலைதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
World Socialist Web Site

உலக சோசலிச வலைதளம் (World Socialist Web Site) (சுருக்கம்:WSWS), நான்காம் அகிலத்துக்கான அனைத்துலகக் குழுவின் இணைய செய்தி மற்றும் தகவல் தளம் ஆகும். உலகளவிலான முக்கியத் தலைப்புகள் தொடர்பான செய்திகளை இத்தளம் வெளியிடுகிறது. தினசரி செய்திகளில் அரசியல், வரலாறு, அறிவியல் தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. கலை, இலக்கியம், இசை தொடர்பான கட்டுரைகளும், கருத்துகளும் பதியப்படுகின்றன. உழைப்பாளர் உரிமை, சமூக ஏற்றத்தாழ்வு நிலை குறித்த செய்திகள் வழங்குவதால், ஐக்கிய அமெரிக்காவில் நன்கறியப்படும் தளம் இது. அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இந்தோனேசியம், இத்தாலியம், பாரசீகம், போலியம், போர்த்துகேயம், ரோமானியம், உருசியம், செர்போ-குரோட்டியம், சிங்களம், எசுப்பானியம், தமிழ், துருக்கியம் அகிய மொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

நான்காம் அகிலத்துக்கான அனைத்துலக குழு (தமிழ்ப் பதிப்பு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சோசலிச_வலைதளம்&oldid=3458609" இருந்து மீள்விக்கப்பட்டது