முகம்மது நசீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது நசீது
Mohamed Nasheed

މުހައްމަދު ނަޝީދު
Mohamed Nasheed by UNDP.jpg
மாலைத்தீவுகள் நாடாளுமன்றத்தின் 19-வது அவைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 மே 2019
குடியரசுத் தலைவர் இப்ராகிம் முகமது சாலி
முன்னவர் ஓசிம் இப்ராகிம்
மச்சங்கோலி மேது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 மே 2019
முன்னவர் புதிய தொகுதி
மாலைதீவு சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 ஆகத்து 2014
துணை குடியரசுத் தலைவர் முகம்மது சிபாசு
முன்னவர் இப்ராகிம் திதி
மாலைத்தீவுகளின் 4-வது அரசுத்தலைவர்
பதவியில்
11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012
துணை குடியரசுத் தலைவர் முகமது வாகித் அசன்
முன்னவர் மாமூன் அப்துல் கயூம்
பின்வந்தவர் முகமது வாகித் அசன்
தனிநபர் தகவல்
பிறப்பு 17 மே 1967 (1967-05-17) (அகவை 55)
மாலே, மாலைத்தீவுகள்
அரசியல் கட்சி மாலைதீவு சனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லைலா அலி அப்துல்லா
(முறிவு. 2020)
பிள்ளைகள் மீரா லைலா நசீது
சாயா லைலா நசீது
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு பன்னாட்டுப் பாடசாலை,
லிவர்பூல் யோன் மூர்சு பல்கலைக்க்ழகம்

முகம்மது நசீது (Mohamed Nasheed, திவெயி: މުހައްމަދު ނަޝީދު; பிறப்பு: 17 May 1967) மாலைத்தீவு அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும்,[1] 2008 முதல் 2012 வரை மாலைத்தீவு அரசுத்தலைவராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் மாலைத்தீவுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத்தலைவரும்,[3] மாலைத்தீவு சனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.[4] 2008 அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முகம்மது நசீது 25% வாக்குகளைப் பெற்றார், அதன் பின்னர் 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த மாமூன் அப்துல் கயூமிற்கு எதிரான பொது எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். நசீது 2008 நவம்பர் 11 இல் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

2011-12 இல் எதிர்க்கட்சிகள் ந்சீதுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. இராணுவத்தினரும், காவல்துறையினரும் இதில் இணைந்து கொண்டனர். இதனை அடுத்து 2012 பெப்ரவரி 7 இல் நசீது பதவியில் இருந்து விலகினார். இராணுவத்தினரால் அதான் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து விலகுவதற்கு வற்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.[5] கயூமின் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களின் உதவியுடன் இராணுவப் புரட்சி மூலம் அவர் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.[6] இவருக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த முகமது வாகித் அசன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை செய்த மாலைத்தீவு தேசிய விசாரணைகள் ஆணைக்குழு நசீதின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறியது.[7] அவர் பதவியில் இருந்த போது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகம்மது என்பவரைக் கைது செய்தமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நசீது 2015 மார்ச்சில் கைது செய்யப்பட்டு,[8] 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[9] பன்னாட்டு மன்னிப்பு அவை இதனை "அரசியல் பழிவாங்கல்" எனக் குற்றஞ் சாட்டியது.[8][10] ஐக்கிய அமெரிக்க அரசுச் செயலகம் "விசாரணையின் போது பொருத்தமான குற்றவியல் நடைமுறைகள் இல்லாதது" குறித்துக் கவலை தெரிவித்தது.[9] இந்தியாவும் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.[11]

2016 இல், நசீது மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியம் சென்ற போது, அவருக்கு அந்நாடு அரசியல் புகலிடம் அளித்தது.[12] சட்டரீதியான தடைகளைச் சுட்டிக்காட்டி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது திட்டங்களை அவர் கைவிட்டார். கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் தனது வெற்றியை நிராகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்தார்.[13] 2018 அரசுத்தலைவர் தேர்தலில், நசீதின் இளமைக்கால நண்பரும், கட்சியின் வேட்பாளருமான இப்ராகிம் முகமது சாலி வெற்றி பெற்றதை அடுத்து, நசீது நாடு திரும்பினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மச்சங்கோலி மேது தொகுதியில் போட்டியிட்டு 1,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[14] அதை அடுத்து அவர் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 மே 6 இல், நசீது அவரது வீட்டுக்கருகில் தனது வாகனத்தில் ஏறும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் படுகாயமுற்றார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nasheed chosen as consensus candidate for speaker". Maldives Independent. 28 May 2019. https://maldivesindependent.com/politics/nasheed-chosen-as-mdps-consensus-candidate-for-speaker-145615. 
  2. Aitkenhead, Decca (1 April 2012). "Dictatorship is coming back to the Maldives and democracy is slipping away". The Guardian. 5 October 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. https://presidency.gov.mv/PO/FormerPresident/4
  4. Ramesh, Randeep (29 October 2008). "Human rights activist wins Maldives presidential election". The Guardian. 5 March 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 15 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Maldives ex-president Mohamed Nasheed was 'forced out'". BBC News. 8 February 2012. https://www.bbc.co.uk/news/world-asia-16945764. 
  6. Nasheed, Mohamed (8 February 2012). "The Dregs of Dictatorship". The New York Times. https://www.nytimes.com/2012/02/08/opinion/in-the-maldives-strangled-democracy.html. 
  7. Sen, Ashish Kumar (30 ஆகத்து 2012). "Maldives panel: President was not forced to resign". The Washington Times. 31 ஆகத்து 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 31 ஆகத்து 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. 8.0 8.1 Burke, Jason. "Former Maldives president Mohamed Nasheed jailed for 13 years". The Guardian. 1 December 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 15 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. 9.0 9.1 "Former Maldives president Nasheed jailed for 13 years". யாகூ! செய்திகள். 26 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Maldives: 13 year sentence for former president 'a travesty of justice'". Amnesty International. 13 March 2015. 11 May 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  11. மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு சிறை: இந்தியா வருத்தம்
  12. "Mohamed Nasheed: Former Maldives president 'given UK asylum'". BBC News. 23 May 2016. https://www.bbc.com/news/world-asia-36365253. 
  13. "Former Maldivian President Mohamed Nasheed renounces presidential bid citing illegal curbs on him". Scroll.in. 20 July 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Machangolhi Medhu Dhaairaa". Mihaaru..com. 22 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Former Maldives president hurt in suspected bomb attack". www.aljazeera.com (ஆங்கிலம்). 2021-05-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
மாமூன் அப்துல் கயூம்
மாலைத்தீவுகளின் அரசுத்தலைவர்
2008–2012
பின்னர்
முகமது வாகித் அசன்
தூதரகப்பதவிகள்
முன்னர்
ஜிக்மே தின்லி
சார்க் தலைவர்
2011
பின்னர்
சுசில் கொய்ராலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_நசீது&oldid=3144158" இருந்து மீள்விக்கப்பட்டது