கி. ராஜநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி. ராஜநாராயணன்
கி. ராஜநாராயணன்
கி. ராஜநாராயணன்
பிறப்புராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள்[1]
16 செப்டம்பர் 1923
இடைசெவல், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு17 மே 2021(2021-05-17) (அகவை 97)[2]
லாஸ்பேட்டை, புதுச்சேரி, இந்தியா
புனைபெயர்கி. ரா
குடியுரிமைஇந்தியர்
காலம்1958– 2021
வகைசிறுகதை,புதினம்
கருப்பொருள்நாட்டுப்புறவியல், கிராமிய வாழ்க்கை
குறிப்பிடத்தக்க படைப்புகள்கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1991)
துணைவர்
கணவதி அம்மாள்
(தி. 1954; இற. 2019)
பிள்ளைகள்
  • திவாகரன்
  • பிரபாகரன்
இணையதளம்
https://www.kirajanarayanan.com/

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[5]

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.[6]

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர் ,கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான" சோதனை"யின் ஆலோசகர் ஆக இருந்துள்ளார்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[7] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரது உடல் இவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[8]

படைப்புகள்[தொகு]

அகராதிகள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

  • கன்னிமை
  • மின்னல்
  • கோமதி
  • நிலை நிறுத்தல்
  • கதவு(1965)
  • பேதை
  • ஜீவன்
  • நெருப்பு
  • விளைவு
  • பாரதமாதா
  • கண்ணீர்
  • வேட்டி
  • கரிசல்கதைகள்
  • கி.ரா-பக்கங்கள்
  • கிராமிய விளையாட்டுகள்
  • கிராமியக்கதைகள்
  • குழந்தைப்பருவக்கதைகள்
  • கொத்தைபருத்தி
  • புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
  • பெண்கதைகள்
  • பெண்மணம்
  • வயது வந்தவர்களுக்கு மட்டும்
  • கதை சொல்லி(2017)
  • மாயமான்

குறுநாவல்[தொகு]

  • கிடை
  • பிஞ்சுகள்

நாவல்[தொகு]

  • கோபல்ல கிராமம்
  • கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது - 1991)
  • அந்தமான் நாயக்கர்

கட்டுரை[தொகு]

  • ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
  • புதுமைப்பித்தன்
  • மாமலை ஜீவா
  • இசை மகா சமுத்திரம்
  • அழிந்து போன நந்தவனங்கள்
  • கரிசல் காட்டுக் கடுதாசி
  • மாந்தருள் ஒரு அன்னப்பறவை

தொகுதி[தொகு]

  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • 1971- தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது
  • 1979-இலக்கிய சிந்தணை விருது
  • 1991 – சாகித்திய அகாதமி விருது
  • 2008 - மா.சிதம்பரம் விருது
  • 2016-தமிழ் இலக்கிய தோட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. கரிசல் இயக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா. காலமானார்
  2. "எழுத்தாளர் கி.ரா. காலமானார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passed-away-3624996.html. பார்த்த நாள்: 17 May 2021. 
  3. "Writer Ki Rajanarayanan passes away at 98 in Puducherry". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 May 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passes-away-at-98-in-puducherry-2303922.html. 
  4. "Eminent Tamil writer Ki Rajanarayanan is no more". தி இந்து. 18 May 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/eminent-tamil-writer-ki-rajanarayanan-is-no-more/article34582661.ece. 
  5. கி. ரா.95
  6. கி. ராஜநாராயணன்
  7. "கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட சிறப்பு விருது". நானிலம். 14 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. கி.ரா.வுக்கு அரசு மரியாதை: தமிழக அரசுக்கும் கௌரவம், ஆசிரியர் தலையங்கம், 21 மே 2021, இந்து தமிழ் நாளிதழ்
  9. கி.ரா.95: வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._ராஜநாராயணன்&oldid=3699630" இருந்து மீள்விக்கப்பட்டது