உள்ளடக்கத்துக்குச் செல்

மீ. ப. சோமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீ. ப. சோமு
பிறப்புசோமசுந்தரம்
(1921-06-17)17 சூன் 1921
மீனாட்சிபுரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசனவரி 15, 1999(1999-01-15) (அகவை 77)
கல்விவித்துவான் (சென்னைப் பல்கலைக்கழகம்)
பணிதலைமைத் தயாரிப்பாளர்
பணியகம்அகில இந்திய வானொலி
அறியப்படுவதுஎழுத்தாளர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1962)

மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்தவர். கோவில் தேவார ஓதுவார்கள் மரபில் தோன்றியவர்.[1] இளமையில் வாய்ப்பாட்டுடன் வீணையும் சாரங்கியும் பயின்றார்.[1] சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் படித்து வித்வான் பட்டம் பெற்றவர். டி. கே. சியுடனான தொடர்பு மூலம் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார்.[1] இவர் புதுமைப்பித்தனின் நண்பர். 1938ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றார். அவர் 1946ல் இளவேனில் என்ற அவரது கவிதைத் தொகுப்பு வெளியானது. அக்கவிதைத் தொகுப்பு மாநில அரசின் விருது பெற்றது. 1954 – 56களில் கல்கி இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1958 -60 களில் நண்பன் என்ற மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி 1981 இல் ஓய்வு பெற்றார். அங்கு தலைமைத் தயாரிப்பாளராகவும் பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இவரது சாகித்தியங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாயுள்ளன.[1] அவரது பயணக் கட்டுரை அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள் 1962ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. அவர் எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் இசை ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ்க்கலைக்களஞ்சியத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சோமு 1999ல் மரணமடைந்தார்.[2][3][4][5]

விருதுகளும் பட்டங்களும்

[தொகு]

எழுதிய நூல்கள்

[தொகு]

(முழுமையானதல்ல)

கவிதைகள்

[தொகு]
  • இளவேனில்
  • குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை

சிறுகதைகள்

[தொகு]
  • கேளாத கானம்
  • உதய குமாரி
  • ஐம்பொன்மெட்டி
  • மஞ்சள் ரோஜா
  • மனை மங்களம்
  • கல்லறை மோகினி
  • திருப்புகழ் சாமியார்

புதினங்கள்

[தொகு]
  • ரவிச்சந்திரிகா
  • கடல் கண்ட கனவு
  • நந்தவனம்
  • வெண்ணிலவுப் பெண்ணரசி
  • எந்தையும் தாயும்

கட்டுரைகள்

[தொகு]
  • கார்த்திகேயனி
  • ஐந்தருவி
  • பிள்ளையார் சாட்சி
  • நீங்காத நினைவுகள்
  • சித்தர் இலக்கியம் ( 3 பகுதிகள் )
  • நமது செல்வம்
  • அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

[தொகு]
  • புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சங்கீத சங்கதிகள், கல்கி
  2. Kay, Ernest (1972). International who's who in poetry. p. 395. ISBN 9780900332197.
  3. Lal, Mohan (2006). The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Volume 5. சாகித்திய அகாதமி. p. 4136. ISBN 9788126012213.
  4. Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி Official website.
  5. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. p. 1291. ISBN 9788126008735.
  6. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீ._ப._சோமு&oldid=4008451" இலிருந்து மீள்விக்கப்பட்டது