சு. சமுத்திரம்
சு. சமுத்திரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1941 திப்பணம்பட்டி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 1 ஏப்ரல் 2003 |
பணி | எழுத்தாளர் |
சு. சமுத்திரம் (Su. Samuthiram, 1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.[1][2][3][4][5]
தமிழ்நாட்டு அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் அமைத்த தமிழிலக்கிய சங்கப்பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராகப் பொறுப்புவகித்தார்.[6] 2001ஆம் ஆண்டு மே மாதம் அப்பதவியைத் துறந்தார். [7]
விருதுகள்[தொகு]
- சாகித்திய அகாதமி விருது -1990.
- தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திடமிருந்து.
- இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு.
- கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளையிடமிருந்து. (மறைவுக்குப்பின்)
எழுதிய புத்தகங்கள்[தொகு]
(முழுமையானது)
- அவளுக்காக (ராணிமுத்து)
- இல்லந்தோறும் இதயங்கள்
- ஊருக்குள் ஒரு புரட்சி
- என் பார்வையில் கலைஞர்
- ஒத்தைவீடு
- ஒரு கோட்டுக்கு வெளியே
- கடித உறவுகள்
- சத்திய ஆவேசம்
- சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
- சாமியாடிகள்
- சோற்றுப்பட்டாளம்
- தராசு
- தாய்மைக்கு வறட்சி இல்லை
- பூ நாகம்
- மண்சுமை
- மூட்டம்
- வட்டத்தை மீறி
- வளர்ப்பு மகள்
- வெளிச்சத்தை நோக்கி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "A voice for the oppressed". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606173237/http://www.hinduonnet.com/mp/2003/04/15/stories/2003041500160400.htm.
- ↑ "சு. சமுத்திரம் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி" இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724024004/http://thatstamil.oneindia.in/news/2003/04/02/samuthiram.html. பார்த்த நாள்: 29 May 2010.
- ↑ "Su. Samuthiram - Editor's note" (in Tamil). Tamil Virtual University. http://www.tamilvu.org/courses/degree/p101/p1012/html/p1012415.htm.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி அதகாரப் பூர்வ இணைய தளம்
- ↑ "Su Samuthiram - Obituary" (in Tamil). Thinnai. http://www.thinnai.com/?module=displaystory&story_id=60305101&format=print&edition_id=20030510.
- ↑ சு. சமுத்திரம், என் பார்வையில் கலைஞர், பக்.175 - 177
- ↑ குறள்பீடம் பதவிகளிலிருந்து தமிழண்ணல், சமுத்திரம் ராஜினாமா 2001 மே 22