ராஜம் கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணன்.jpg
பிறப்பு1925
முசிறி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், இந்தியா
இறப்புஅக்டோபர் 20, 2014 (அகவை 88–89)
சென்னை
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கரிப்பு மணிகள், முள்ளும் மலரும், மலர்கள், ஊசியும் உணர்வும், வேருக்கு நீர்
சமயம்இந்து சமயம்
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணன்
பிள்ளைகள்இல்லை
விருதுகள்நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சாகித்திய அகாதமி விருது, சோவியத் நாடு நேரு விருது, திரு.வி.க. விருது

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பிறப்பும் இளமைக் காலமும்[தொகு]

1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.[1] திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். [2] மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

எழுத்து[தொகு]

பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் .[1]1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள உப்பள தொழிலாளர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

அரசுடைமை[தொகு]

இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. [2]

முதுமைக் காலம்[தொகு]

கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.[3]

விருதுகள்[தொகு]

ராஜம் கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:

 • 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
 • 1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)[2]
 • 1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)[2]
 • 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
 • 1991—திரு.வி.க. விருது

நூல்கள்[தொகு]

இவரின் படைப்புகளுள் சில:

புதினங்கள்[தொகு]

 1. அமுதமாகி வருக
 2. அழுக்கு 1990, தாகம் சென்னை
 3. அவள்
 4. அலைகள், 1965 மார்ச், கலைமகள் காரியாலயம். சென்னை-4 [4]
 5. அலைவாய்க்கரையிலே
 6. அன்னையர்பூமி
 7. அன்புக்கடல்
 8. ஆண்களோடு பெண்களும்
 9. இடிபாடுகள்
 10. உத்தரகாண்டம்
 11. உயிர் விளையும் நிலங்கள்
 12. ஓசைகள அடங்கிய பிறகு
 13. கட்டுக்காவல்; 1969 திசம்பர்; பக்.212; பாரி நிலையம், சென்னை.[5]
 14. கதைக்கனிகள்
 15. கரிப்பு மணிகள்
 16. காக்கானி
 17. குறிஞ்சித்தேன்
 18. கூடுகள் 1990, தாகம் சென்னை
 19. கூட்டுக்குஞ்சுகள்
 20. கைவிளக்கு 1966, மங்கள நூலகம், சென்னை
 21. கோடுகளும் கோலங்களும்
 22. கோபுரபொம்மைகள்
 23. சத்திய வேள்வி
 24. சலனங்கள்
 25. சுழலில் மிதக்கும் தீபங்கள்
 26. சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)'
 27. சோலைக்கிளி; 1969 ஏப்ரல்; பக்.282; பாரி நிலையம், சென்னை. [5]
 28. தங்கமுள்
 29. தோட்டக்காரி
 30. நிழற்கோலம்
 31. பவித்ரா
 32. பாதையில் பதிந்த அடிகள் பொதுவுடைமை இயக்கபோராளி மணலூர் மணியம்மை குறித்து எழுதிய நூல்[6]
 33. பாரதகுமாரிகள்
 34. பானுவின் காதலன் (கல்கி 1956-11-18 இதழில் தொடங்கி 1957-03-10 இதழில் நிறைவடைந்த தொடர்கதை); 1959 திசம்பர்; பக்.150; மங்களம் பதிப்பகம், சென்னை. [5]
 35. புதியதோர் உலகம் செய்வோம்
 36. புதிய கீதம்
 37. புதிய சிறகுகள்
 38. புயலின் மையம்
 39. பெண்குரல் 1953
 40. மண்ணகத்துப்பூந்துளிகள்
 41. மலர்கள்
 42. மலையருவி
 43. மாணிக்க கங்கை
 44. மாயச்சுழல்; பதி.2: 1964; பக்.364 + iv; மங்களம் பதிப்பகம், சென்னை [5]
 45. மாறி மாறி பின்னும்
 46. மானுடத்தின் மகரந்தங்கள்
 47. முள்ளும் மலர்ந்தது
 48. வளைக்கரம்
 49. வனதேவியின் மைந்தர்கள்
 50. விடியும்முன்
 51. விலங்குகள், 1975, பாரி புத்தகப்பண்ணை, சென்னை. [4]
 52. வீடு
 53. வேருக்கு நீர் (புதினம்) - சாகித்ய அகாதெமி விருதுபெற்றது
 54. ரோஜா இதழ்கள்

சிறுகதைத் தொகுதிகள்[தொகு]

 1. அலைகடலிலே
 2. அல்லி
 3. உயிர்ப்பு
 4. ஊசியும் உணர்வும்
 5. கல்வி
 6. களம், 1985, பாரி புத்தகப்பண்ணை, சென்னை.
 7. கனவு
 8. கிழமைக்கதைகள்
 9. சிவப்பு ரோஜோ
 10. நித்திய மல்லிகை
 11. பச்சைக்கொடி
 12. மலைரோஜா
 13. மின்னி மறையும் வைரங்கள்
 14. வடிகால்
 15. வண்ணக்கதைகள்

பெண்ணியம்[தொகு]

 1. காலம்தோறும் பெண்
 2. காலம்தோறும் பெண்மை
 3. யாதுமாகி நின்றாய்
 4. இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

வாழ்க்கை வரலாறு[தொகு]

 1. டாக்டர் ரங்காச்சாரி, 1965 ஏப்ரல், [7]
 2. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
 3. சத்திய தரிசனம்

தன் வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

 1. காலம்; சேகர் பதிப்பகம், சென்னை 78; பதிப்பு 2014

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார் :: சிபிஎம்- தமுஎகச இரங்கல்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 22 அக்டோபர் 2014. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. 2.0 2.1 2.2 2.3 கலைமகள்; நவம்பர் 2014; பக்கம் 23
 3. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
 4. 4.0 4.1 தில்லைநாயகம், வே (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1966; மு.பதி 1969; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 32
 5. 5.0 5.1 5.2 5.3 தில்லைநாயகம், வே.; தமிழ்நாடு நூற்றொகை 1970; பக்.84
 6. தீக்கதிர்
 7. தில்லைநாயகம், வே (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1966; மு.பதி 1969; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 9

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜம்_கிருஷ்ணன்&oldid=3431436" இருந்து மீள்விக்கப்பட்டது