டேனியல் செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. செல்வராஜ்
D.Selvaraj Portrait.jpg
டி.செல்வராஜ்
பிறப்பு சனவரி 14, 1938 (1938-01-14) (அகவை 80)
தென்கலம், திருநெல்வேலி
பணி எழுத்தாளர், வழக்கறிஞர்
அறியப்படுவது பொதுவுடமைச் சார்பு

தானியல் செல்வராசு (டி. செல்வராஜ், பிறப்பு சனவரி 14,1938) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த[1] செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1][2][3]. . பொதுவுடமைக் கொள்கைகளில் பிடிப்புடைய செல்வராஜ் எழுதிய முதல் நாவல் திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாகக் கொண்ட மலரும்-சருகும் ஆகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட தேனீர் எனும் நாவல் திரைப்படமாக வந்துள்ளது. இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதை, 50 ஓரங்க நாடகம், இருவரின் வாழ்க்கை வரலாறு, 6 நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய தோல் எனும் நாவல் தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 "2012 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு". டிசம்பர் 21, 2012. தினமலர். பார்த்த நாள் டிசம்பர் 22, 2012.
  2. "திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது". தினகரன் (டிசம்பர் 22,2012). பார்த்த நாள் டிசம்பர் 22, 2012.
  3. http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sa-award2012.pdf

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_செல்வராஜ்&oldid=2215198" இருந்து மீள்விக்கப்பட்டது