உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 1975 ஆம் ஆண்டு சூலை 11 மற்றும் 12 திகதிகளில் மதுரையில் நடைபெற்ற செம்மலர் இலக்கிய இதழின் எழுத்தாளர்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், பேச்சாளர்கள் என அனைவரையும் இணைத்த ஒரு சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகும். [1]

துவக்கம்[தொகு]

செம்மலரில் சிறுகதை, கவிதை, கட்டுரைகள், எழுத அணிதிரட்டிய 13 எழுத்தாளர்களுக்கென 1971ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னனி முற்போக்கு இலக்கிய பேச்சாளர் என். சங்கரய்யா அவர்கள் ஓர் பயிற்சி வகுப்பு நடத்தினார். இந்த பயிற்சி வகுப்பில் மக்களுக்கான கலை இலக்கிய வடிவங்களை முன்னெடுத்துச் செல்வது, மிகப் பழமையான கலைவடிவங்களை பாதுகாப்பது போன்ற உத்திகள் கற்றுத்தரப்பட்டது. தொடர்ச்சியாய் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து எழுத்தாளர்கள் எழுதத்துவங்கி 4 ஆண்டுகளில் வளர்ந்து 1975ஆம் ஆண்டில் மாநாடை நடத்தும் அளவிற்கு மாறியது.[1]

1975 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு, கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியான வடிவம் பெற்றது. அதன் தலைவராக முத்தையாவும் பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பரிசுகள் மற்றும் விருதுகள்

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 1.2 கே. முத்தையா- எழுத்துலகில் அரை நாற்றாண்டு- காலம் வெளியீடு- மதுரை-1999- page- 90