ஜோ டி குரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ டி குருஸ்
ஜோ டி குருஸ்
பிறப்பு1963
நாகர்கோவில், தமிழ்நாடு
தொழில்புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர்
மொழிதமிழ், மலையாளம்
தேசியம்இந்தியர்
காலம்2004–இன்று
வகைபாரம்பரிய மீனவர்கள், கப்பல் போக்குவரத்து, திரைப்படம்
கருப்பொருள்நெய்தல், இலக்கியம், வரலாறு, புதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆழிசூழ் உலகு(புதினம்)
துணைவர்சசிகலா
பிள்ளைகள்அந்தோனி டி குருஸ், ஹேமா டி குருஸ்


ஜோ டி குருஸ் (Joe D Cruz), பிறப்பு: 17 மே 1963) தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை.[சான்று தேவை]

இளமைக் காலம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

படைப்புகள்[தொகு]

 • புலம்பல்கள் (கவிதை) -2004 தமிழ்
 • ஆழி சூழ் உலகு (நாவல்) -2004 தமிழ்
 • விடியாத பொழுதுகள் (ஆவணப்படம்) 2008 தமிழ்
 • கொற்கை (நாவல்)2009 |கொற்கை தமிழ்
 • ஆழி சூழ் உலகு (நாவல்) தமிழ்
 • TOWARDS DAWN (ஆவணப்படம்) 2009 தமிழ்
 • எனது சனமே (ஆவணப்படம்) 2010 தமிழ்
 • அஸ்தினாபுரம் (நாவல்) 2016 தமிழ்
 • வேர்பிடித்த விளைநிலங்கள் (தன்வரலாறு)2017 தமிழ்
 • இனையம் துறைமுகம் (ஆவணப்படம்) 2018 தமிழ்
 • கவனம் ஈர்க்கும் கடலோரம் (கட்டுரைகள்) -2019 தமிழ்


விருதுகள்[தொகு]

 • இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1]
 • இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவை தவிர, கனடா இலக்கியத் தோட்ட விருது-2006, சுஜாதா-உயிர்மை விருது-2011 (கொற்கை), லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது-2013, இலயோலா இலக்கிய விருது -2014. இலக்கிய வீதி அன்னம் விருது- 2014, உஸ்தாத் பிஸ்மில்லாகான் விருது-2015, திருவள்ளுவர் இலக்கிய விருது-2015 ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் [2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "'கொற்கை' நாவலுக்காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது". செய்திகள்.காம். 19 திசம்பர் 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
 2. "'மரியான்' திரைப்படத்துக்கு ஜோ.டி. குருஸ் வசனம்". Tamil Heritage Trust. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_டி_குரூஸ்&oldid=3833542" இலிருந்து மீள்விக்கப்பட்டது