நாஞ்சில் நாடன்
| நாஞ்சில் நாடன் | |
|---|---|
நாஞ்சில் நாடன், சூன் 22, 2013, தொராண்டோ, கனடாவில் | |
| பிறப்பு | 31 திசம்பர் 1947 (அகவை 78) |
| பணி | கவிஞர் |
| விருதுகள் | Sahitya Akademi Award in Tamil |
நாஞ்சில் நாடன் [பிறப்பு: திசம்பர் 31, 1947] (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீர நாராயணமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன், நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார்.
வாழ்கை வரலாறு
[தொகு]கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள வீரநாராயணமங்கலம் என்ற சிற்றூரில் கணபதியா பிள்ளை, சரஸ்வதி அம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளில் மூத்த மகனாக நாஞ்சில் நாடன் பிறந்தார்.[1][2] க. சுப்பிரமணியம் என்ற பெயரில் பிறந்த இவர், நாஞ்சில் நாடன் என்ற புனைப்பெயரில் எழுதுகிறார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களை உள்ளடக்கிய பகுதியான நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்[3]). 1964 இல் பள்ளி இறுதி வகுப்பான எஸ்.எஸ்.எல்.சி (அப்போது பதினோராம் வகுப்பு) படித்தார். பள்ளியில் முதல் மாணவராகவும், மாவட்ட அளவில் இரண்டாம் மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] பின்னர் வேலைக்காக பம்பாய் போய் சேர்ந்தார். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள டபிள்யூ. எச். பிராடி அண்ட் கோ நிறுவனத்தில் பணிபுரிந்தார். பம்பாய் தமிழ் சங்கத்தின் இலக்கிய இதழான ஏடுவில் பணியாற்றியதன் மூலம் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை, "விரதம்", 1975 ஜூலையில் நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழில் வெளியானது. அந்த முதல் கதைக்கு அந்த மாதத்திற்கான 'இலக்கிய சிந்தனை' பரிசு கிடைத்தது. இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை (2002) என்ற பெயரில் திரைப்படமாக்கினார்.[5] 2010 ஆம் ஆண்டில், இவரது சிறுகதைத் தொகுப்பான சூடிய பூ சூடற்க நூலுக்காக, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6] இவரது எட்டுத் திக்கும் மத யானை என்ற புதினம், படித்துறை என்ற பெயரில் தமிழ் திரைப்படமாக எடுக்கப்படுகிறது.[7] இவர் ஆறு புதினங்கள், 112 சிறுகதைகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.[8] இவரது சில படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
நாஞ்சில் நாடன் இப்போது தனது சமூகமான நாஞ்சில்நாட்டின் வெள்ளாளர்கள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதி வருகிறார்.
இவர் சாந்தியாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரின் மகள் சங்கீதா ஒரு மருத்துவர், அவரது மகன் கணேஷ் ஒரு பொறியாளர்.
பெருமைகளும் விருதுகளும்
[தொகு]- 2010ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.[9]
- கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான இயல்விருது தொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது
படைப்புகள்
[தொகு]புதினங்கள்
[தொகு]- 1977 தலைகீழ் விகிதங்கள்
- 1979 என்பிலதனை வெயில்காயும்
- 1981 மாமிசப்படைப்பு
- 1986 மிதவை
- 1993 சதுரங்கக் குதிரை
- 1998 எட்டுத் திக்கும் மதயானை
சிறுகதை தொகுதிகள்
[தொகு]- 1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
- 1985 வாக்குப்பொறுக்கிகள்
- 1990 உப்பு
- 1994 பேய்க்கொட்டு
- 2002 பிராந்து
- 2004 நாஞ்சில் நாடன் கதைகள்
- சூடிய பூ சூடற்க
- முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
- கான் சாகிப்
- கொங்குதேர் வாழ்க்கை
கவிதை
[தொகு]- 2001 மண்ணுள்ளிப் பாம்பு
- பச்சை நாயகி
- வழுக்குப்பாறை
- புளிக்கும் ஆப்பழம்
கட்டுரைகள்
[தொகு]- 2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
- 2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
- நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
- தீதும் நன்றும்
- திகம்பரம்.
- காவலன் காவான் எனின்
- அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
- அகம் சுருக்கேல்
- எப்படிப் பாடுவேனோ?
- 2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)
கருத்துக்கள்
[தொகு]இவர் தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பற்றி குறிப்பிடுகையில் காலம் கடந்து இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்[10]. சாகித்ய அகாடமி அரசியல் மற்றும் பணபலத்தின் செயல்பாட்டுக் களமாகி விட்டது. அங்கு வெறும் கல்வியாளர்களின் கைதான் ஓங்கி உள்ளது. அவர்கள் மரபு இலக்கியங்களை முழுமையாக படிப்பதில்லை. அரசியல் செல்வாக்கோ, பண செல்வாக்கோ இருந்தால் விருதை பெறவேண்டியதில்லை, வாங்கிவிடலாம் என்கிறார். எனக்கு முன்னால் மிகப் பெரிய தகுதியுடையவர்கள் 20 முதல் 30 பேர் வரை விருது பெற காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 25 பேருக்கு இந்த விருதை வழங்கலாம்[11] என்றும் கூறியுள்ளார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதெமி விருது". தினமணி. 21 December 2010 இம் மூலத்தில் இருந்து 14 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110814172119/http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=349479&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.
- ↑ Dutt, Karthik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. சாகித்திய அகாதமி. p. 848. ISBN 978-81-260-0873-5.
- ↑ Nanjil Nadan, '`Nanjil Nattu Vellalar Vazhkai'`(Tamil) – Ethnography of Vellalars of Nanjilnadu, Kalachuvadu Publication, Nagercoil, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87477-55-5, Page:21
- ↑ Kannadasan, Akila (24 December 2010). "The writerly life". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108151329/http://www.hindu.com/mp/2010/12/24/stories/2010122451250800.htm.
- ↑ RAO., SUBHA J (21 July 2003). "A study in contrast". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 August 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030819113113/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/07/21/stories/2003072101280100.htm.
- ↑ "எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது" (in Tamil). தினமலர். 20 December 2010 இம் மூலத்தில் இருந்து 29 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110929113105/http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149691.
- ↑ "Arya's 'Padithurai'". Indiaglitz. Archived from the original on 13 December 2009. Retrieved 20 December 2010.
- ↑ Kolappan, B (21 December 2010). "Sahitya Akademi award for Nanjil Nadan". தி இந்து. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article965808.ece.
- ↑ நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதெமி விருது
- ↑ The writerly life தி இந்து, நாள்: ஜனவரி 1, 2011
- ↑ தினமணி செய்தி 31/01/2011