சோ. தர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோ. தர்மன்
பிறப்புசோ. தர்மராஜ்[1]
ஆகத்து 8, 1953(1953-08-08)
உருளைகுடி, கோவில்பட்டி, தமிழ்நாடு இந்தியா
பணிசிறுகதை எழுத்தாளர்
பெற்றோர்சோலையப்பன்
பொன்னுத்தாய்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2019)[2][3]

சோ. தர்மன் (Cho. Dharman, பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். [4] 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர்.

பிறப்பு[தொகு]

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகத்து 8-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[4] ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான பூமணி அவர்களின் மருமகன் இவர். சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! என தமிழ் இந்து பத்திரிக்கையால் புகழ பெற்றவர்.

நூல்கள்[தொகு]

இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.[4]

புதினம்[தொகு]

 1. கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [4][5]
 2. சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
 3. தூர்வை (2017)
 4. பதிமூனாவது மையவாடி (2020)

சிறுகதைத்தொகுதிகள்[தொகு]

 1. ஈரம் (சிறுகதைத்தொகுதி)
 2. சோகவனம்
 3. வனக்குமாரன்
 4. அன்பின் சிப்பி (2019)
 5. நீர்ப்பழி

வாழ்க்கை வரலாறு[தொகு]

 1. வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)

விருதுகள்[தொகு]

 1. 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
 2. கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
 3. சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.[6]
 4. சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப்பெற்றார். [7][8]
 5. தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார்  விருது’ - 2019.

மேற்கோள்கள்[தொகு]

 1. சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 20 டிசம்பர் 2019. https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html. 
 2. சோ.தர்மனின் ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 18 டிசம்பர் 2019. https://www.hindutamil.in/news/tamilnadu/530938-sakitya-academy-award-for-writer-so-dharman.html. 
 3. B. Kolappan, தொகுப்பாசிரியர் (DECEMBER 19, 2019). Cho. Dharman wins Sahitya Akademi Award. The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/cho-dharman-wins-sahitya-akademi-award/article30342968.ece. 
 4. 4.0 4.1 4.2 4.3 நூலக உலகம் மாத இதழ், 2019 திசம்பர், பக்.5
 5. "எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி ஐகோர்ட் தீர்ப்பு". Indian Express Tamil. 2022-05-10 அன்று பார்க்கப்பட்டது.
 6. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு
 7. "Press Release sahitya Akademi awards 2019" (PDF). sahitya-akademi.gov.in. 18 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. "சூல் நாவலுக்காகச் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html. பார்த்த நாள்: 18 December 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._தர்மன்&oldid=3428619" இருந்து மீள்விக்கப்பட்டது