எஸ். ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 13, 1966[1] மல்லாங்கிணர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | ![]() |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | சண்முகம், மங்கையர்க்கரசி |
வாழ்க்கைத் துணை | சந்திரபிரபா |
பிள்ளைகள் | ஹரி பிரசாத், ஆகாஷ் |
வலைத்தளம் | |
http://www.sramakrishnan.com/ |
எஸ். ராமகிருஷ்ணன் (ச. இராமகிருட்டினன்) (பிறப்பு: ஏப்ரல் 13, 1966) என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்[2].
தற்சமயம் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இலக்கியச் செயற்பாடு[தொகு]
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்[2].
"இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று ஜெயமோகனும், "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்[3][4]. புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார்[5].
விருதுகள்[தொகு]
வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011ஆம் ஆண்டுக்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது[6]. இதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது[7][8]. சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது யாமம் புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது[9]. பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது[10]. இவர் எழுதிய அரவான் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:
- தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது 2001
- ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது 2008[11]
- கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011[12]
- சாகித்ய அகாதமி விருது (சஞ்சாரம் நாவல்)[13]
சாகித்ய அகாதமி விருது[தொகு]
சஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.[14]
படைப்புகளின் பட்டியல்[தொகு]
புதினங்கள்[தொகு]
- உப பாண்டவம்(2000)
- நெடுங்குருதி(2003)
- உறுபசி(2005)
- யாமம்(2007)
- துயில்(2010)
- நிமித்தம்(2013)
- சஞ்சாரம்(2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் )
- இடக்கை(2016)
- பதின்(2017)
- ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை(2019)
சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]
- வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ்
- காட்டின் உருவம், அன்னம்
- எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் பாகம் 1,2மற்றும் 3 (2014)
- நடந்துசெல்லும் நீரூற்று(2006)
- பதினெட்டாம் நூற்றாண்டின் மழை(2008)
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது(2010)
- நகுலன் வீட்டில் யாருமில்லை(2009)
- புத்தனாவது சுலபம்(2011)
- தாவரங்களின் உரையாடல்(2007)
- வெயிலை கொண்டு வாருங்கள்(2001)
- பால்ய நதி(2003)
- மழைமான்(2012)
- குதிரைகள் பேச மறுக்கின்றன(2013)
- காந்தியோடு பேசுவேன்(2013)
- என்ன சொல்கிறாய் சுடரே(2015)
கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]
- விழித்திருப்பவனின் இரவு(2005)
- இலைகளை வியக்கும் மரம்(2007)
- என்றார் போர்ஹே(2009)
- கதாவிலாசம்(2005)
- தேசாந்திரி(2006)
- கேள்விக்குறி(2007)
- துணையெழுத்து(2004)
- ஆதலினால்(2008)
- வாக்கியங்களின் சாலை(2002)
- சித்திரங்களின் விசித்திரங்கள்(2008)
- நம் காலத்து நாவல்கள்(2008)
- காற்றில் யாரோ நடக்கிறார்கள்(2008)
- கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
- மலைகள் சப்தமிடுவதில்லை(2009)
- வாசகபர்வம்(2009)
- சிறிது வெளிச்சம்(2010)
- காண் என்றது இயற்கை(2010)
- செகாவின்மீது பனி பெய்கிறது(2010)
- குறத்தி முடுக்கின் கனவுகள்(2010)
- என்றும் சுஜாதா(2011)
- கலிலியோ மண்டியிடவில்லை(2011)
- சாப்ளினுடன் பேசுங்கள்(2011)
- கூழாங்கற்கள் பாடுகின்றன(2011)
- எனதருமை டால்ஸ்டாய்(2011)
- ரயிலேறிய கிராமம்(2012)
- ஆயிரம் வண்ணங்கள்(2016)
- பிகாசோவின் கோடுகள்(2012)
- இலக்கற்ற பயணி(2013)
திரைப்படம் குறித்த நூல்கள்[தொகு]
- பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்(2006)
- அயல் சினிமா(2007)
- உலக சினிமா(2008)
- பேசத்தெரிந்த நிழல்கள்(2009)
- சாப்ளினோடு பேசுங்கள்(2011)
- இருள் இனிது ஒளி இனிது(2014)
- பறவைக் கோணம்(2012)
- சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்(2013)
- நான்காவது சினிமா(2014)
- குற்றத்தின் கண்கள்(2016)
- காட்சிகளுக்கு அப்பால்(2017)
===குழந்தைகள் நூல்கள்===
- ஏழு தலைநகரம் கதை
கள்(2005)
- கிறு கிறு வானம்(2006)
- கால் முளைத்த கதைகள்(2006)
- நீள நாக்கு(2011)
- பம்பழாபம்(2011)
- எழுத தெரிந்த புலி(2011)
- காசு கள்ளன்(2011)
- தலையில்லாத பைய்யன்(2011)
- எனக்கு ஏன் கனவு வருது(2011)
- வானம்
- லாலிபாலே
- நீளநாக்கு
- லாலீப்பலே(2011)
- அக்காடா(2013)
- சிரிக்கும் வகுப்பறை(2013)
- வெள்ளை ராணி(2014)
- அண்டசராசம்(2014)
- சாக்கிரடீஸின் சிவப்பு நூலகம்(2014)
- கார்ப்பனை குதிரை(2014)
- படிக்க் தெரிந்த சிங்கம்(2016)
- மீசை இல்லாத ஆப்பிள்(2016)
- பூனையின் மனைவி(2016)
- இறக்கை விரிக்கும் மரம்(2016)
- உலகின் மிகச்சிறிய தவளை(2016)
- எலியின் பாஸ்வோர்ட்(2017)
உலக இலக்கியப் பேருரைகள்[தொகு]
- ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்(2013)
- ஹோமரின் இலியட்(2013)
- ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(2013)
- ஹெமிங்வேயின் கடலும் கிழவனும்(2013)
- தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்(2013)
- லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா(2013)
- பாஷோவின் ஜென் கவிதைகள்(2013)
வரலாறு[தொகு]
- எனது இந்தியா
- மறைக்கப்பட்ட இந்தியா
நாடகத் தொகுப்புகள்[தொகு]
- அரவான்(2006)
- சிந்துபாத்தின் மனைவி(2013)
- சூரியனை சுற்றும் பூமி(2013)
நேர்காணல் தொகுப்புகள்[தொகு]
- எப்போதுமிருக்கும் கதை
- பேசிக்கடந்த தூரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- நம்பிக்கையின் பரிமாணங்கள்(1994)
- ஆலீஸின் அற்புத உலகம்(1993)
- பயணப்படாத பாதைகள்(2003)
தொகை நூல்கள்[தொகு]
- அதே இரவு, அதே வரிகள், (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)
- வானெங்கும் பறவைகள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள நூல்கள்[தொகு]
- Nothing but water
- Whirling swirling sky
பணியாற்றிய திரைப்படங்கள்[தொகு]
- சண்டைக்கோழி
- பாகுபலி
- ஆல்பம்
- பாபா
- தாம்தூம்
- பீமா
- உன்னாலே உன்னாலே
- கர்ண மோட்சம்
- மோதி விளையாடு
- சிக்கு புக்கு
- அவன் இவன்
- யுவன் யுவதி
பணியாற்றிய குறும்படங்கள்
- கர்ண மோட்சம்(2012)
- தாராமணியில் காரப்பன் பூச்சிகள்(2012)
- மற்றவள்(2014)
- கொக்கரக்கோ(2014)
- வீட்டுக்கணக்கு(2014)
- பிடாறன்(2014)
- வாழ்க்கை(2014)
- திங்கள்(2015)
- ஒரு கோப்பை தண்ணீர்(2015)
- இரு குமிழிகள்(2015)
- கிளீன் போல்ட்(2016)
சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்கள்[தொகு]
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது[15]. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு[16]. சண்டக்கோழி படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்[17].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பிறந்த நாள்". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
- ↑ 2.0 2.1 "எஸ். ராவின் தளத்தில் அவர் தந்துள்ள சுய அறிமுகம்". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
- ↑ ஜெயமோகன். "இலக்கியத்தை வாழ்நாள் சேவையாக". பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ மனுஷ்யபுத்திரன். "எஸ்.ரா ஒரு இயக்கம்". பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "நெடுங்குருதி, யாமம் பற்றி ந.முருகேச பாண்டியன்". இதழ் 121 பக்.67. காலச்சுவடு. பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான விருதுகளைப் பெற்றவர்கள்". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
- ↑ என்.செல்வராஜ் (ஆகத்து 16, 2015). "யாமத்துக்கு 2007-இல் சிறந்த நாவல் விருது". நாவல்- விருதுகளும் பரிசுகளும். திண்ணை. பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "தமிழியலக்கியத் தோட்டத்தின் 2007க்கான புனைவு இலக்கிய விருது". பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "2010க்கான தாகூர் இலக்கிய விருதுகள்". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
- ↑ "நெடுங்குருதிக்கு ஞானவாணி". திண்ணை (பிப்ரவரி 25, 2005). பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "எஸ்.ராவுக்கு சி.கெ.கெ விருது". ஜெயமோகன். பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "எஸ். ராவுக்கு கண்ணதாசன் விருது". ஜெயமோகன். பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2161434
- ↑ http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55180-sahitya-akademi-announced-for-s-ramakrishnan-for-his-sancharam-novel.html
- ↑ சி. சரவண கார்த்திகேயன் (ஜனவரி 9, 2012). "காவல் கோட்டம் -எஸ்ரா விமர்சனம்- எதிர்கொள்ளப்பட்டவிதம்". தமிழ் பேப்பர்.நெட். பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "உபபாண்டவம்- ஜெயமோகன், கோபி விமர்சனங்கள்". மாமல்லன். பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
- ↑ "சண்டக்கோழி வசனத்தால் சர்ச்சை". அந்திமழை.காம் (ஜனவரி 09, 2006). பார்த்த நாள் ஆகத்து 23, 2015.
வெளி இணைப்புகள்[தொகு]
- எஸ். ராமகிருஷ்ணனின் இணையதளம்
- மனுஷ்யபுத்திரன் "எஸ்.ரா ஒரு மிகப்பெரிய இயக்கம்"
- Openreadingroom 'ஓபன்ரீடிங்ரூம்' தளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள்
- அழியாச் சுடர்கள் 'அழியாச் சுடர்கள்' தளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள்