எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்.ராமகிருஷ்ணன் (க்ரியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
க்ரியா ராமகிருஷ்ணன்
பிறப்புஎஸ். ராமகிருஷ்ணன்
இறப்பு (அகவை 75)
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலைப் பட்டம், லயோலா கல்லூரி
பணிபதிப்பகத்துறை

எஸ். ராமகிருஷ்ணன் என்ற க்ரியா ராமகிருஷ்ணன் (இறப்பு: நவம்பர் 17, 2020) முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளர் ஆவார்.[1] தமது க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட முக்கியமான பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். சோதனை முயற்சிகள், செம்மையாக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் முதலானவற்றில் இவர் காட்டிவரும் ஈடுபாடு, பங்களிப்பு காரணமாக தமிழ்ப் பதிப்புத்துறையின் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். கூத்துப்பட்டறை, மொழி அறக்கட்டளை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியவற்றின் உருவாக்கத்திலும் பங்குவகித்திருக்கிறார். ஆர்.கே.சுவாமி விளம்பர நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார்[2].

இளமைக்காலம்[தொகு]

லயோலா கல்லூரியில் சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடக்கத்தில் விளம்பரத்துறையில் பணியாற்றி, 1974 ஆம் ஆண்டில் க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2020/nov/17/kriya-ramakrishnan-died-3505601.html. பார்த்த நாள்: 17 November 2020. 
  2. சமஸ் (நவம்பர் 6, 2013). "மாற்றத்தின் வித்தகர்கள்". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 20, 2015.
  3. "தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி 'க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/literature/602359-cre-a-s-ramakrishnan-passed-awar-1.html. பார்த்த நாள்: 17 November 2020.