அசோகமித்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசோகமித்ரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அசோகமித்திரன்
Asokamitran.jpg
பிறப்புதியாகராஜன்
செப்டம்பர் 22, 1931(1931-09-22)
சிக்கந்தராபாத், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு23 மார்ச்சு 2017(2017-03-23) (அகவை 85)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது

அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் [1] . எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். [2] அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.[3]

1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.[4]

ஆக்கங்கள்[தொகு]

அசோகமித்திரன் 1957ம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். 9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.[5]

சிறுகதைகள்[தொகு]

 1. அப்பாவின் சிநேகிதர்
 2. உண்மை வேட்கை
 3. காலமும் ஐந்து குழந்தைகளும் [6]
 4. தந்தைக்காக
 5. நாடகத்தின் முடிவு
 6. பிப்லப் சௌதுரியின் கடன்
 7. முறைப்பெண்
 8. வாழ்விலே ஒருமுறை
 9. விமோசனம்

நாவல்கள்[தொகு]

 1. ஆகாசத்தாமரை
 2. இன்று; செப்டம்பர் 1984; நர்மதா பதிப்பகம், சென்னை.
 3. ஒற்றன்
 4. கரைந்த நிழல்கள்
 5. தண்ணீர்
 6. பதினெட்டாவது அட்சக்கோடு[7]
 7. மானசரோவர்[8]

குறுநாவல்கள்[தொகு]

 1. இருவர்
 2. விடுதலை
 3. தீபம்
 4. விழா மாலைப் போதில்

பிற[தொகு]

அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2

கட்டுரைகள்[தொகு]

அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில:-

 • இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்தன.
 • இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
 • லில்லி நினைவுப் பரிசு, 1992
 • இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.[9]
 • அக்ட்சரா விருது, 1996.
 • இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.[10]
 • 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருது
 • இவர் 2012 மே மாதத்தில் என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.[11]
 • 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலை க.நா.சு. விருது
 • 2013 மார்ச்சு 30 இல் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது

ஆங்கிலம்[தொகு]

 1. ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
 2. தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்
 3. ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்

மேற்கோள்கள்[தொகு]

 1. அசோகமித்திரன் 10
 2. பன்னாட்டு எழுத்தாளர் திட்டம் 1973
 3. https://en.wikipedia.org/wiki/University_of_Iowa அயோவா பல்கலைக்கழகம்,1973]
 4. Times of India.24 maarch 2017
 5. திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலன்
 6. http://www.sirukathaigal.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/
 7. "A writer of two cities". தி இந்து. 12 செப்டம்பர் 2002. Archived from the original on 2003-06-24. https://web.archive.org/web/20030624165101/http://www.hindu.com/thehindu/mp/2002/09/12/stories/2002091201160100.htm. பார்த்த நாள்: 15 சனவரி 2017. 
 8. "A very human picture". தி இந்து. 3 அக்டோபர் 2010. http://www.thehindu.com/books/a-very-human-picture/article809294.ece. பார்த்த நாள்: 15 சனவரி 2017. 
 9. "Recipients of Harmony Awards". Organisation of Understanding and Fraternity — Dalmia Bros.. பார்த்த நாள் 26 July 2013.
 10. "Writers celebrate Sahitya Akademi Foundation Day". Indian Express (Chennai, India). 14 March 2013. http://newindianexpress.com/cities/chennai/article1500171.ece. 
 11. "NTR National Literary Award for Ashokamitran". The Hindu (Hyderabad, India). 4 May 2012. http://www.thehindu.com/news/national/ntr-national-literary-award-for-ashokamitran/article3384822.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகமித்திரன்&oldid=3230916" இருந்து மீள்விக்கப்பட்டது