மேலாண்மை பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலாண்மை பொன்னுசாமி

மேலாண்மை பொன்னுசாமி (1951 - 30 அக்டோபர் 2017) தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர்.[1] இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.[2][3]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.

இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசித்தார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி பொன்னுத்தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன்.

5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.

மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார்.

இவரது கதைகள் பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகின.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்த இவர் அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான்.

மறைவு[தொகு]

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2017 அக்டோபர் 30 அன்று சென்னையில் காலமானார்.[4]

முக்கிய சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

 • சிபிகள்
 • பூக்காத மாலை
 • பூச்சுமை
 • மானுடப் பிரவாகம்
 • காகிதம்
 • கணக்கு
 • மனப் பூ
 • தழும்பு
 • தாய்மதி
 • உயிர்க்காற்று
 • என்கனா
 • மனப்பூ
 • ஒருமாலைப் பூத்து வரும்
 • அன்பூவலம்
 • வெண்பூமனம்
 • மானாவாரிப்பூ
 • இராசாத்தி

குறுநாவல்[தொகு]

 • ஈஸ்வர...
 • பாசத்தீ
 • தழும்பு
 • மரம்
 • கோடுகள்

நாவல்[தொகு]

 • முற்றுகை
 • அச்சமே நரகம்
 • ஆகாய சிறகுகள்; 1995இல் கல்கியில் வெளிவந்த தொடர்.
 • மின்சாரப்பூ
 • ஊர்மண்
 • முழுநிலா

பரிசுகள்[தொகு]

விருதுகள்[தொகு]

 • மனப் பூ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது
 • வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் "மாட்சிமைப் பரிசு" என்ற கேடயம்.
 • உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள்.

சிறப்புகள்[தொகு]

 • சிபிகள் தொகுப்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாட நூலாக இடம் பெற்றது.
 • பாட்டையா சிறுகதை பணிரெண்டாடம் வகுப்பு பாடமாக இடம்பெற்றது.
 • 10க்கும் மேற்பட்டோர் இவரது படைப்புகளை ஆய்வு செய்து 10க்கும் மேற்பட்டோர் எம்.பில் பட்டம் பெற்றது. நான்கு பேர் பி.எச்டி பட்டம் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "The novelist who captures the rural life in its pristine form". The Hindu இம் மூலத்தில் இருந்து 2009-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090201162711/http://hindu.com/2009/01/22/stories/2009012258020200.htm. பார்த்த நாள்: 22 திசம்பர் 2013. 
 2. "Book on culture of Marxists politicians". The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101011082738/http://www.hindu.com/2010/10/07/stories/2010100762090200.htm. பார்த்த நாள்: 22 திசம்பர் 2013. 
 3. "Tributes paid to Dr. Reddy". The Hindu இம் மூலத்தில் இருந்து 2009-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090811062906/http://www.hindu.com/2009/08/08/stories/2009080854960300.htm. பார்த்த நாள்: 22 திசம்பர் 2013. 
 4. எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார், தி இந்து

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாண்மை_பொன்னுசாமி&oldid=3568842" இருந்து மீள்விக்கப்பட்டது