கோவி. மணிசேகரன்
கோவி. மணிசேகரன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 1992 இல் அவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
பொருளடக்கம்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ளார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.[1] இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 1992ல் இவரது வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறவஞ்சி[2] தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தரிடம் 21 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்ஷே விருதும் பெற்றது.[3]
விருதுகள்[தொகு]
- சாகித்திய அகாதமி விருது - 1992
- தினத்தந்தியின் சி. பா. ஆதித்தனார் விருது [4]
எழுதிய நூல்கள்[தொகு]
(முழுமையானதல்ல)
- குற்றாலக் குறவஞ்சி
- நாயக்க மாதேவிகள்
- கங்க நாச்சியார்
- மலய மாருதம்
- தேரோடும் வீதியிலே
- தாஜ்மகால்
- நித்திரை மேகங்கள்
- திரிசூலி
- வராக நதிக்கரையில்
- காஞ்சிக் கதிரவன்
- காளையார் கோவில் ரதம்
- காற்று வெளியிடைக் கண்ணம்மா
- காந்தாரி
- கொல்லிப்பாவை
- கொடுத்துச் சிவந்த கைகள்
- குடவாயில் கோட்டம்
- இளவரசி மோகனாங்கி
- அஜாத சத்ரு
- பொன் வேய்ந்த பெருமாள்
- மணி பல்லவம்
இயக்கிய திரைப்படங்கள்[தொகு]
- தென்னங்கீற்று (திரைப்படம்) (தமிழ் மற்றும் கன்னடம்)
- யாகசாலை (தமிழ்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kovi Manisekaran Profile" (Tamil). Tamil Virtual University. பார்த்த நாள் 8 June 2010.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
- ↑ "Tamil Cinema History - Parts 773 and 774" (Tamil). Dina Malar. பார்த்த நாள் 8 June 2010.
- ↑ Tributes paid to Adityanar